ஒரு சில பொலிஸ் அதிகாரிகள் முன்னெடுக்கும் செயற்பாடுகளினால் ஒட்டு மொத்த
பொலிஸ் அதிகாரிகளையும் மக்கள் வேறுவிதமாக நோக்கும் நிலையேற்பட்டுள்ளதாக
மட்டக்களப்பின் சமூக செயற்பாட்டாளர் இ.பிரேம்நாத் தெரிவித்துள்ளார்.
எந்தவித பிடியாணையும் இல்லாமல் மட்டக்களப்பு பொலிஸார் ஏறாவூர் பொலிஸ்
பிரிவுக்குள் வந்து தன்னை வலுக்கட்டாயமாக கையில் விலங்கிட்டு கைது செய்து
சென்று தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதுடன் மன உளைச்சலையும்
ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை
தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இந்த ஊடக சந்திப்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்…..
“கடந்த நான்காம் திகதி என்னுடைய தொழில் நிலையத்திற்கு இரண்டு பொலிஸார் வருகை
தந்தனர்.
ஒருவர் சீருடையிலும் மற்றைய ஒருவர் சிவில் உடையிலும் வந்தார்கள்.
வந்து என்னுடன் பேசிக் கொண்டு இருந்தபோது எனது கையை பிடித்தார்கள் பிடித்து
விட்டு என்னிடம் கூறினார்கள் எனக்கு பிடியாணை இருப்பதாக உம்மை கைது
செய்கின்றோம் என்றனர்.
அதே நேரத்தில் எனது கைக்கு விலங்கை பூட்டினர்.
அந்த நேரத்தில் நான் எனக்கான பிடியாணையினை காட்டும்படி கூறினேன் அவர்கள்
அதற்கு எது வித நடவடிக்கை எடுக்கவில்லை. அதை காட்டவும் இல்லை.
என்னை கைது
செய்து ஒரு மணி நேரம் வீதியில் வைத்திருந்து விட்டு ஏறாவூர் பொலிஸ்
நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் மறுநாள் காலையில் அங்கிருந்து மட்டக்களப்பு
நீதிமன்றுக்கு என்னை அழைத்து வந்தனர்”

