முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இனத்துவ உணர்வுள்ள தலைமுறையே தமிழ்த்தேசியத்தின் அரண் – சிறீதரன் எம்.பி

இனத்தையும், மொழியையும் நேசிக்கின்ற அடுத்த தலைமுறையின் உருவாக்கம் தான், தனது இருப்புக்காகப் போராடும் ஒரு இனத்தின் எதிர்கால நம்பிக்கையாக அமைய முடியும் என நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

சிறீதரன் எம்.பியின் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் 2.1மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட கல்லூரியின் பிரதான மண்டபத்தை மாணவர்களின் பயன்பாட்டுக்கு கையளிக்கும் நிகழ்வின் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், இனத்தையும், மொழியையும் நேசிக்கின்ற அடுத்த தலைமுறையின் உருவாக்கம் தான், தனது இருப்புக்காகப் போராடும் ஒரு இனத்தின் எதிர்கால நம்பிக்கையாக அமைய முடியும். 

முருகானந்தாக் கல்லூரி 

அத்தகையோர் தலைமுறையின் தோற்றத்திற்கு வழிகோலும் சமூகக் கடப்பாட்டைக் கொண்ட பாடசாலைகள், கல்வி அடைவுமட்டத்திற்கான தளங்களாக மட்டுமல்லாது, பிள்ளைகளின் ஆளுமை விருத்திக்கும், தலைமைத்துவ வாண்மைக்குமான களங்களை ஏற்படுத்த வேண்டும். 

இனத்துவ உணர்வுள்ள தலைமுறையே தமிழ்த்தேசியத்தின் அரண் - சிறீதரன் எம்.பி | The Next Generation That Loves Race And Language

அந்தக் காலப்பெரும்பணியை முரசுமோட்டை முருகானந்தாக் கல்லூரி செவ்வனே நிறைவேற்றி வருகிறது” என தெரிவித்தார். 

கல்லூரியின் முதல்வர் அரசரட்ணம் பங்கையற்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.