வடக்கு கிழக்கில் சில தமிழ் அரசியல்வாதிகள் தங்களது அரசியல் இருப்பை தக்க
வைப்பதற்காக தையிட்டி விகாரை வைத்து அரசாங்கத்துக்கு எதிராக மக்களை
திசைதிருப்தி குழப்புகின்ற செயற்பாட்டு அரசியல் நாடகங்களை நிகழ்த்தி
கொண்டிருக்கின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்று (11) பழைய மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது கருத்து வெளியிட்ட பிரபு எம்பி, “அரசாங்கத்தை என்ன தான் குழப்புகின்ற செயற்பாட்டில்
ஈடுபட்டிருந்தாலும் நாங்கள் தொடர்ச்சியாக எங்கள் மக்களின் ஆதரவுடன் பயணிப்போம்.
என்பிபி அரசாங்கம்
மட்டக்களப்பு வைத்தியசாலையில் தற்போது புற்றுநோய் பிரிவில் பல மருந்து
களுக்கு தட்டுப்பாடு நிலவுவது தொடர்பான பிரச்சினையை சுகாதார அமைச்சரின்
கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து அவர் அது உடனடியாக தீர்த்து வைக்கப்படும்
என அறிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியமைத்து இன்று ஆறு மாதங்களை கடந்து
பயணித்துக் கொண்டிருக்கின்றோம். இந்த நாட்டில் கடந்த காலம் மக்கள் எதிர்
நோக்கிய பொருளாதார மற்றும் கொரோனாவினால் பல அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.
இருந்தபோதும் இன்று தேசிய மக்கள் சக்தி இந்த அரசாங்கத்தை பெறுப்பேற்றதன்
பின்னர் நாட்டை கட்டியெழுப்புவதற்கான வழிவகைகளையும் திட்டங்களையும் உருவாக்கி
கொண்டிருந்தோம் அந்த வகையில் பொருளாதார ரீதியாக நலிவுற்ற மக்களுக்கான பல
திட்டங்களை உருவாக்கி அவர்களது வாழ்வை பலப்படுத்து வதற்கான வேலையை செய்து
வருகின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.

