கனடாவில்(canada) போதைப்பொருட்கள் கடத்தல் கும்பலை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மிகப்பெரிய சதி செயல் முறியடிக்கப்பட்டு உள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர்.
கனடாவில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக காவல்துறையினர் நடத்திய சோதனையில், கனடாவில் குடியேறிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 7 பேர் உட்பட மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 47.9 மில்லியன் டொலர் மதிப்புள்ள 479 கிலோ கொகெயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
அமெரிக்காவிலிருந்து கனடாவிற்கு போதைப்பொருள் கடத்தல்
விசாரணையில், இந்த கும்பல் அமெரிக்காவிலிருந்து, கனடாவிற்கு பாரவூர்திகளில் போதைப்பொருள் கடத்துவது அம்பலம் ஆனது. துப்பாக்கி மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இந்த கும்பல் மீது கனடா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் விபரம் பின்வருமாறு:

டொராண்டோவைச் சேர்ந்த சஜ்கித் யோகேந்திரராஜா (31), பிராம்ப்டனைச் சேர்ந்த மன்பிரீத் சிங் (44)
*ஹாமில்டனைச் சேர்ந்த பிலிப் டெப் (39), பிராம்ப்டனைச் சேர்ந்த அரவிந்தர் பவார் (29), காலேடனைச் சேர்ந்த கரம்ஜித் சிங் (36), குருதேஜ் சிங் (36), கேம்பிரிட்ஜைச் சேர்ந்த சர்தாஜ் சிங் (27), ஜார்ஜ்டவுனைச் சேர்ந்த ஷிவ் ஓங்கர் சிங் (31),
மிசிசாகாவைச் சேர்ந்த 27 வயது ஹாவோ டாமி ஹுய்ன் ஆகியோர் ஆவர்.
மிகப்பெரிய சதி செயல் முறியடிப்பு
”போதைப்பொருள் கடத்தலில் இருந்து கிடைக்கும் வருமானத்தை இந்தியா எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு நிதியளிக்கப் பயன்படுத்தி உள்ளனர். இதனால் மிகப்பெரிய சதி செயல் முறியடிக்கப்பட்டு உள்ளது” என காவல்துறையினர் தெரிவித்தனர்.


