முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பு மாநகர சபை மேயர் தெரிவு : சஜித் தரப்பிற்கு மொட்டுக்கட்சி ஆதரவு

கொழும்பு மாநகர சபைக்கு (Colombo Municipal Council) ஐக்கிய மக்கள் சக்தி சிறந்த நபர் ஒருவரை மேயராக பெயரிடும் பட்சத்தில் நிச்சயமாக சிறிலங்கா பொதுஜன பெரமுன எதிர்க்கட்சி உறுப்பினருக்கு ஆதரவளிக்குமென தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயத்தினை சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் (Sagara Kariyawasam) தெரிவித்தார்

கொழும்பு மாகநகர சபையில் மேயர் தெரிவின்போது சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நிலைப்பாடு தொடர்பில் குறிப்பிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அரசாங்கத்துக்கு பெரும்பான்மை இல்லை

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ”உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைப்பதற்கு ஆளும் அரசாங்கத்துக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.

கொழும்பு மாநகர சபை மேயர் தெரிவு : சஜித் தரப்பிற்கு மொட்டுக்கட்சி ஆதரவு | Colombo Municipal Council Mayor Slpp Support Sjb

அதனால் எதிர்க்கட்சியினால் மாநகர சபையில் ஆட்சி அமைக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலே நாங்கள் இருக்கிறோம்.

தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கு எதிர்க்கட்சியில் இருந்து அதிக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பது ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்தாகும். அதனால் ஆட்சி அமைப்பது தொடர்பான பிரதான பொறுப்பு இருப்பது அவர்களுக்காகும்.

அதுதொடர்பில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. என்றாலும் ஐக்கிய மக்கள் சக்தியால் மாநகர மேயராக பெயரிடப்படுபவர், அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய, நேர்மையானவராக இருக்க வேண்டும் என்பதுடன் ஊழல் மோசடிகளுடன் தொடர்பற்றவாரக இருந்தால், நிச்சயமாக மேயர் தெரிவில் வெற்றிபெற்று, எதிர்க்கட்சிக்கு ஆட்சி அமைக்க முடியுமாகும்.

மேயர் தெரிவு 

ஐக்கிய மக்கள் சக்தி பெயரிடும் மேயருக்கு நாங்கள் ஆதரவளிப்பது, ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பது என்ற அடிப்படையில் அல்ல. மாறாக எதிர்க்கட்சி உறுப்பினர் என்ற அடிப்படையிலாகும்.

கொழும்பு மாநகர சபை மேயர் தெரிவு : சஜித் தரப்பிற்கு மொட்டுக்கட்சி ஆதரவு | Colombo Municipal Council Mayor Slpp Support Sjb

அதனாலே மேயராக பெயரிடும் போது, வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகாத, அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியுமான நபரை நியமிக்குமாறு தெரிவித்து வருகிறோம். அதனால் கொழும்பு மாநகர சபை எதிர்வரும் 16ஆம் திகதி மாநகர ஆணையாளர் தலைமையில் கூடி, மேயர் தெரிவு இடம்பெற இருக்கிறது.

அதன்போது நாங்கள் தெரிவித்ததுபோல் ஐக்கிய மக்கள் சக்தி சிறந்த நபர் ஒருவரை மேயராக பெயரிடும் பட்சத்தில் நிச்சயமாக சிறிலங்கா பொதுஜன பெரமுன எதிர்க்கட்சி உறுப்பினருக்கு ஆதரவளிப்போம்” என தெரிவித்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.