முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பற்றி எரியும் மத்திய கிழக்கு…! பதிலடியை ஆரம்பித்த ஈரான் – முக்கிய தலைவர்களை போட்டு தள்ளிய இஸ்ரேல்

புதிய இணைப்பு

இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேலின் மீது சுமார் 100 டிரோன்களை ஏவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தற்போது இந்த அச்சுறுத்தல்களை தடுத்து நிறுத்துவதற்கு பாதுகாப்பு அமைப்புகளை பயன்படுத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாம் இணைப்பு

இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் (Iran) உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கடுந்தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தலைநகர் தெஹ்ரானில் மாணவர்கள் மத்தியில் பேசிய போதே அயத்துல்லா அலி கமேனி (Seyyed Ali Hosseini Khameneh) இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு இஸ்ரேலிய தாக்குதல்களில் பல இராணுவத் தளபதிகள் மற்றும் விஞ்ஞானிகள் கொல்லப்பட்டதை அவர் உறுதிப்பிடுத்தி உள்ளார்.

முதலாம் இணைப்பு

ஈரான் (Iran) தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை மற்றும் அணுசக்தி நிலையங்களை இலக்கு வைத்து வெள்ளிக்கிழமை அதிகாலை இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

பற்றி எரியும் மத்திய கிழக்கு...! பதிலடியை ஆரம்பித்த ஈரான் - முக்கிய தலைவர்களை போட்டு தள்ளிய இஸ்ரேல் | Israel Strikes Iran Nuclear Sites Military Bases

தேவைப்பட்டால் தாக்குதல்கள் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.  

இந்த தாக்குதலில், ஈரான் புரட்சிகர காவல்படை தலைவர் ஹொசைன் சலாமி (Hossein Salam) இஸ்ரேலிய (Israel) தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடுமையான பதிலடி

இதேவேளை, நடான்ஸ் அணுசக்தி நிலையத்தில் வெடிப்புகள் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பற்றி எரியும் மத்திய கிழக்கு...! பதிலடியை ஆரம்பித்த ஈரான் - முக்கிய தலைவர்களை போட்டு தள்ளிய இஸ்ரேல் | Israel Strikes Iran Nuclear Sites Military Bases

இஸ்ரேலிய தாக்குதலில் மூத்த அணு விஞ்ஞானிகள் 2 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர்களில் அணுசக்தி அமைப்பின் முன்னாள் தலைவர் ஃபெரேடூன் அப்பாசியும் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தனது அணுசக்தி திட்டத்திற்கு எதிராக இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ”கடுமையான பதிலடி” கொடுக்க ஈரான் திட்டமிட்டுள்ளதாக ஈரானிய பாதுகாப்பு வட்டாரத்தை மேற்கொள்காட்டி சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.  

https://www.youtube.com/embed/_-bvmtg3Re4

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.