முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வவுனியா மாநகர சபையின் முதல்வராக காண்டீபன்..! கலந்துரையாடலில் தீர்மானம்

வவுனியா மாநகரசபைக்கான முதல்வர், பதில் முதல்வர் தெரிவுகள் இன்றையதினம் (16)
இடம்பெறவுள்ள நிலையில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் உறுப்பினர்
முதல்வராகவும், பிரதி முதல்வராக ஜனநாயக தேசிய கூட்டணியின் உறுப்பினரது பெயரும்
பிரேரிக்கப்படவுள்ளதாக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்
ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சி அமைக்க

மேலும் தெரிவிக்கையில்,

21உறுப்பினர்களை கொண்டுள்ள வவுனியா மாநகரசபையில் ஆட்சி அமைப்பதற்கு 11
ஆசனங்கள் தேவை.

அந்தவகையில் சபையில் ஆட்சி அமைப்பது தொடர்பாக தமிழ் கட்சிகளினால்
புரிந்துணர்வு உடன்பாடு ஒன்று எட்டப்பட்டிருந்தது.

வவுனியா மாநகர சபையின் முதல்வராக காண்டீபன்..! கலந்துரையாடலில் தீர்மானம் | Vavuniya Municipal Council Major

அதற்கமைய ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி பெற்றுக்கொண்ட நான்கு ஆசனங்களும்,
தமிழரசுக்கட்சி பெற்றுக்கொண்ட மூன்று ஆசனங்கள், ஜக்கிய மக்கள் சக்தியின்
இரண்டு ஆசனங்கள், ஜனநாயக தேசிய கூட்டணியின் ஒரு ஆசனம், அகில இலங்கை தமிழ்
காங்கிரஸின் ஒரு ஆசனம் என 11ஆசனங்கள் கைவசம் உள்ளது.

எட்டப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியில் தெரிவு
செய்யப்பட்டிருந்த முன்னாள் நகரசபை உறுப்பினரும், ஆசிரியருமான சுந்தரலிங்கம்
காண்டீபன் முதல்வராக பெயரிடப்படவுள்ளார்.

ஜனநாயக தேசிய கூட்டணி சார்பில் தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர் பரமேஸ்வரன்
கார்த்தீபன் பிரதி முதல்வராக பெயரிடப்படவுள்ளார்.

இந்த நிலையில் குறித்த கூட்டுக்கு ஆட்சி அமைக்கத் தேவையான 11ஆசனங்கள்
உறுதியாகியுள்ள நிலையில் எதிர்பார்க்கப்பட்ட படி இந்தக்கூட்டே
ஆட்சியமைக்கும் என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.