முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நுவரெலியாவில் அரச பேருந்தில் பல பெயர் பலகை! பயணிகள் அசௌகரியம்

நுவரெலியா இ.போ.ச டிப்போவின் கீழ் இயங்கும் நுவரெலியா நானுஓயா மற்றும் ரதல்ல
வரை தினமும் சேவையில் ஈடுபடும் பேருந்தில் பல பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதால்
பயணிகள் குழப்பம் அடைந்து வருகின்றனர்.

தினமும் நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்தில் இருந்து (wpNC – 2232)
இலக்கத்தகடு பொறிக்கப்பட்ட அரச பேருந்து காலை முதல் நானுஓயா பிரதான நகர் வரை
இயக்கப்படுகின்றது இறுதியில் இரவு 7:15 நுவரெலியாவிலிருந்து ரதல்ல நகர் வரை
இயக்கப்படுகிறது.

பெயர் பலகை

இருந்தும் குறித்த பேருந்தில் வழித்திடலுக்கு பொருத்தமற்ற
(வெளிமடை – பொலன்னறுவை) என்ற பெயர் பலகை பெரியதாக
காட்சிபடுத்தப்பட்டுள்ளதாகவும் நானுஓயா,ரதல்ல என்ற பெயர் பலகை சிறியதாக
ஓரத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பயணிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

நுவரெலியாவில் அரச பேருந்தில் பல பெயர் பலகை! பயணிகள் அசௌகரியம் | Bus Boards Confuse Passengers Nuwara Eliya

மேலும் புதிதாக நுவரெலியாவிற்கு வரும் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
வழித்தடம் கேட்டு வரும் நபர்கள் இந்த பெயர் பலகையை பார்த்தால் வேறு ஒரு ஊர்
என்று நினைத்து குழப்பம் அடைந்து வருகின்றனர் , அதிகமானவர்கள்
நுவரெலியாவிலிருந்து வெளிமடை அல்லது பொலன்னறுவை செல்வதற்காக ஏறி இருக்கையில்
அமர்ந்து கொள்கின்றன பின்னர் நடத்துனரீடம் பயணச் சீட்டு பெரும்போதே பேருந்து
பயணிக்கும் சரியான இடம் நடத்துனரினால் அறிவிக்கப்படுகின்றது.

ஒரு சிலர் நீண்ட
தூரம் பயணித்த பின்னர் மீண்டும் பேருந்திலிருந்து இறங்கி வரும்
சந்தர்ப்பங்களும் ஏற்பட்டு வருகிறது.

பார்வை குறைபாடுகள்

மேலும் அதிக வயதானோர் மற்றும் கண் பார்வை குறைபாடுகள் உள்ளோர் பெரிய அளவில்
மாத்திரம் உள்ள பெயர் பலகையில் உள்ள வழித்திடத்தை கேட்டறிந்து பேருந்தில் ஏறி
அமர்ந்து கொள்ளும் நிலையும் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் , இவ்வாறான
பெயர் பலகையை பார்த்து அதிர்ச்சி அடைகின்றன.

நுவரெலியாவில் அரச பேருந்தில் பல பெயர் பலகை! பயணிகள் அசௌகரியம் | Bus Boards Confuse Passengers Nuwara Eliya

இதனால் குழப்பம் அடைந்த
நுவரெலியாவிலிருந்து நானுஓயா மற்றும் ரதல்ல பயணம் செய்யும் பயணிகளும் இந்த
பேருந்தில் ஏற தயக்கம் காட்டி வருவதாகவும் இதனால் தாம் பாரிய அசௌகரியங்களை
எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.

எனவே இரவு நேரத்தில் இயக்கப்படும் பேருந்துகளுக்கு தற்போது வெளிச்சத்துடன்
ஒளிரும் டிஜிட்டல் பெயர் பலகைகள் வைத்தால் அனைவரும் நலம் பெறுவார்கள் எனவும்
(wpNC – 2232) இலக்கத்தகடு பொறிக்கப்பட்ட அரச பேருந்தில் உடனடியாக தேவையற்ற
பெயர் பலகையை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என இப்பிரதேச
மக்களும், பயணிகளும் கோரிக்கை விடுக்கின்றனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.