முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அமெரிக்காவின் முடிவில் ஈரானுக்கு அழிவு: இஸ்ரேலுக்கு காத்திருக்கும் வாய்ப்பு!

புதிய இணைப்பு

இஸ்ரேல்–ஈரான் போர் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் இடம்பெற்ற பாதுகாப்பு சபை கூட்டம், சுமார் ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் நீடித்து நிறைவடைந்துள்ளது.

அமெரிக்கா தற்போது பரிசீலித்து வரும் மிக முக்கியமான நடவடிக்கையாக, ஈரானின் ஃபோர்டோ அணு உலையை தாக்க ‘பங்கர் பஸ்டர்’ ஏவுகணைகளை (மிக ஆழத்தில் உள்ள இலக்குகளை அழிக்கக்கூடிய பெரிய குண்டுகள்) பயன்படுத்துவதாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலின் ஏவுகணைகள் ஃபோர்டோ அணு உலையின் ஆழத்தை அடைய இயலாததால், அமெரிக்க ஆதரவு கோரப்பட்டுள்ளது. 

இதன்படி, 

அமெரிக்கா இதுவரை இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளில் எந்த வகையிலும் நேரடி பங்கேற்பு இல்லை என்றாலும், அனைத்து திட்டங்களையும் ட்ரம்ப் மேசையில் வைத்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், ஈரானின் அணுத் திட்டத்தை முற்றிலும் முடிவுக்கு கொண்டு வருவது ட்ரம்ப் நிர்வாகத்தின் முக்கிய இலக்காகவே திகழ்கிறது.

முதலாம் இணைப்பு

இஸ்ரேல் – ஈரானுக்கு இடையிலான முறுகல் மேலும் அதிகரித்து நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தேசிய பாதுகாப்பு சபையை கூட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தேசிய பாதுகாப்பு சபை கூட்டமானது, வெள்ளைமாளிகையில் பாதுகாப்பு மற்றும் அவசர நிலை முடிவுகளுக்காக பயன்படுத்தப்படும் உயர் பாதுகாப்பு வாய்ந்த அறையில் தற்போது இடம்பெற்று வருகிறது.

இந்த கூட்டம், பிரதானமாக ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான மோதலில் அமெரிக்கா ஈடுபட வேண்டுமா என்பதை தீர்மானிப்பதற்காக நடைபெறுவதாக கூறப்படுகிறது.

ட்ரம்பின் முடிவு

இதன்படி, குறித்த கூட்டத்திற்கு பிறகு ட்ரம்ப எடுக்கும் முடிவை ஒட்டுமொத்த சர்வதேச நாடுகளும் உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவின் முடிவில் ஈரானுக்கு அழிவு: இஸ்ரேலுக்கு காத்திருக்கும் வாய்ப்பு! | Trump Calls Emergency Security Meeting

ட்ரம்ப ஈரான் மற்றும் இஸ்ரேல் போரில் அமெரிக்க களமிறங்குவதாக அறிவித்தால், அந்த முடிவு ஈரானுக்கு பேரிடியாக அமைவதுடன், இஸ்ரேலுக்கு பெரும் வாய்ப்பாகவும் மாறும்.

இந்த நிலையில், ஈரானின் ஃபோர்டோ அணுஉலை மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் அமெரிக்காவின் உதவியை நாடியுள்ளது.

அறிவிப்புகள் 

இவ்வாறானதொரு பின்னணியில், கனடாவில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டிலிருந்து ஒரு நாள் முன்னதாகவே ட்ரம்ப் வெளியேறினார்.

அமெரிக்காவின் முடிவில் ஈரானுக்கு அழிவு: இஸ்ரேலுக்கு காத்திருக்கும் வாய்ப்பு! | Trump Calls Emergency Security Meeting

கனடாவில் (Canada) நடந்த G7 உச்சிமாநாட்டிலிருந்து திரும்பும் போது, தேசிய பாதுகாப்பு சபை தயாராக இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

தெஹ்ரானில் வசிப்பவர்களை வெளியேறுமாறு அவர் எச்சரித்த சிறிது நேரத்தின் பின்னர், இந்த அதிரடி அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.