ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதியில் குடாகம பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட கனரக வாகனம் மீது லொறி ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது, லொறியின் உதவியாளர்
காயங்களுக்கு உள்ளாகி டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளார்.
மேலதிக விசாரணை
இந்தநிலையில், சாரதி மது போதையில்
லொறியை செலுத்தியதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து
தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட லொறியின் சாரதியை ஹட்டன் நீதவான்
நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
மேலும், சம்பவம்
தொடர்பாக ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.

