ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள சுமார் 20 அணு மற்றும் ஆயுத உற்பத்தி தளங்கள் மீது இஸ்ரேலின் விமானப்படை (Israeli Air Force) தாக்குதல் நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
இத்தாக்குதலில் மொத்தம் 60 போர்விமானங்கள் பங்கேற்றதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது.
குறித்த தாக்குதல்களின் போது, அணு ஆயுத திட்டத் தளங்கள் பிரதானமாக அழிக்கப்பட்டதாக தெரிக்கப்படுகிறது.
தாக்கப்பட்ட உள்கட்டமைப்புகள்
அதன்படி, அணு ஆயுதத் திட்டத்தில் தொடர்புடைய ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையங்கள், சென்டிரிப்யூஜ் (centrifuge) உற்பத்தி தளங்கள், யுரேனியம் செறிவூட்டும் உள்கட்டமைப்புகள் தாக்கப்பட்டுள்ளன.
⭕️ 60 IAF Jets Strike 20+ Military Targets in Tehran
The IDF struck key nuclear and missile sites across Tehran, including:
– Uranium enrichment & centrifuge sites
– Missile & air defense production facilities
– Nuclear weapons R&D centersThese sites fuel Iran’s weapons… pic.twitter.com/9p8EJ4CJkG
— Israel Defense Forces (@IDF) June 18, 2025
ஈரான், தன்னுடைய அணு திட்டத்தின் வேகத்தையும் பரப்பையும் அதிகரிக்க இந்தத் தளங்களை உருவாக்கியிருந்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
மேலும், ஏவுகணை யாரிப்புக்கான மூலப்பொருட்கள் மற்றும் கூறுகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் ஈரானின் வான் பாதுகாப்பு (Air Defense) அமைப்புகளுக்கான உற்பத்தி மையங்கள் ஆகியவையும் அடையாளம் காணப்பட்டு தாக்கப்பட்டுள்ளன.

