தேசிய மக்கள் சக்தியிலிருந்து பலாங்கொடை பிரதேச சபைக்கு தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரஞ்சித் உதய குமார பதவி விலகியுள்ளார்.
இந்நிலையில், வெற்றிடமான அவரது பதவிக்கு காமாதிகே ஆரியதாச தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பலாங்கொடை பிரதேச சபை தேர்தல் அதிகாரி சுரங்க அம்பகஹதன்னவால் குறித்த வெற்றிடம் மீள் நிரப்பப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவிப்பு
சிறப்பு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டு இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

