முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மலையக மக்களின் காணி மற்றும் வீட்டுரிமைக்கான அமைதிவழி போராட்டம்

மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (21)
ஹட்டன் நகரில் காலை 10 மணிக்கு நடைபெறவிருக்கின்ற
அமைதிவழி போராட்டத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முழுமையான ஆதரவை
வழங்கும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “மலையக மக்களின் விடுதலைக்கு காணி உரிமை என்பது அடிப்படையானதாகும். காணி
உரிமைதான் எமது மக்களை தலை நிமிர்ந்து வாழ வைக்கும். ஆகவே இலங்கை தொழிலாளர்
காங்கிரஸ் காணி உரிமைக்கு முக்கியத்துவம் வழங்கி செயற்பட்டு வருகின்றமையை
அனைவரும் அறிவார்கள்.

 காணி உரிமை

அந்த வகையில் நான் நாடாளுமன்ற உறுப்பினராகிய நாள் தொடக்கம் தொடர்ச்சியாக
பல்வேறு முறை இந்த மக்களின் காணி உரிமைக்காக நாடாளுமன்றத்திலும்,
நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் பலமாக குரல் கொடுத்து வருகிறேன். 

மலையக மக்களின் காணி மற்றும் வீட்டுரிமைக்கான அமைதிவழி போராட்டம் | Land And Housing Rights Of Upcountry People

இந்தப்
போராட்டம் கடைசி மலையைகத் தமிழனுக்கும் காணி உரிமை கிடைக்கும் வரை தொடரும் காணி உரிமை தொடர்பாக நான் அமைச்சராக இருந்தக் காலப்பகுதிகளில் இரண்டு
அமைச்சரவை பத்திரங்களையும் சமர்ப்பித்திருந்தேன்.

மலையக மக்களின் காணி உரிமை
தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸோடு
இனைந்து செயற்படுகின்ற அனைத்து சக்திகளையும் இனைத்துக்கொண்டு காணி உரிமை
கோசத்தை இந்த நாடே கேட்கும் அளவிற்கு கொண்டுச்செல்ல வேண்டிய அவசியம் மலையக
சமூகத்துக்கு இருக்கிறது.

ஆகவேதான் நாளை நடைபெறவிருக்கின்ற “காணி உரிமை தொடர்பான அமைதிவழி
போராட்டத்திற்கு” இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் முழுமையான
ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்குவோம்” என குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.