முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

2005 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

2005 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பதை குறித்து கீழே காணலாம்.

அந்நியன்:

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று அந்நியன். சதா, விவேக், பிரகாஷ் ராஜ் என பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.

அந்நியன், அம்பி, ரெமோ என மூன்று விதமாக நடித்து அசத்திய சியான் விக்ரம் இப்படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை தனது திரை வாழ்க்கையில் கண்டார்.

2005 - ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 2005 Best Tamil Movies

மீண்டும் இணையும் தனுஷ் - அனிருத் கூட்டணி.. வெறித்தனமான அப்டேட்

மீண்டும் இணையும் தனுஷ் – அனிருத் கூட்டணி.. வெறித்தனமான அப்டேட்

சச்சின்:

2005ம் ஆண்டு ஜான் மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் சச்சின். விஜய்யை தாண்டி ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன் என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த இப்படம் 2002ல் தெலுங்கில் வெளிவந்த நீதோ என்ற படத்தின் ரீமேக் ஆகும். அழகான காதலை வெளிப்படுத்தியுள்ள இப்படத்தை தற்போதும் ரசிகர்கள் ரசித்து பார்த்து வருகின்றனர்.

2005 - ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 2005 Best Tamil Movies

கஜினி:

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்து 2005ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் கஜினி. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து அசின் ஜோடியாக நடித்திருப்பார்.

வித்தியசமான கதைக்களத்தில் உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்தது. இன்று வரை சூர்யாவின் சிறந்த நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

2005 - ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 2005 Best Tamil Movies

சந்திரமுகி:

பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, விஜயகுமார், நாசர், மாளவிகா, கேஆர்.விஜயா, வினீத் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து கடந்த 2005ம் ஆண்டு வெளியான படம் சந்திரமுகி. த்ரில்லர் கதையை காமெடியோடு ரூ. 19 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது.

2005 - ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 2005 Best Tamil Movies

சிவகாசி:

பேரரசு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சிவகாசி. இப்படத்தில் பிரகாஷ் ராஜ், அசின், எம்.எஸ். பாஸ்கர், கீதா மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

மேலும் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் விஜய்யுடன் இணைந்து நடிகை நயன்தாரா நடனமாடி இருப்பார். மாபெரும் வெற்றியடைந்த இப்படம் இன்று வரை விஜய் ரசிகர்களால் மறக்கமுடியாத படங்களில் ஒன்றாக இருக்கிறது.

2005 - ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 2005 Best Tamil Movies

ஐயா:

ஹரி இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஐயா. கிராமத்து பின்னணியில் உருவான இப்படத்தில் கதாநாயகனாக சரத்குமார் நடித்திருந்தார். மேலும், நடிகை நயன்தாரா இப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.

பிரகாஷ் ராஜ், நெப்போலியன், லட்சுமி, ராகினி, சார்லி, வடிவேலு என பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது.

2005 - ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 2005 Best Tamil Movies

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.