நைஜீரியாவிலிருந்து பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈரானிய (Iran) அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா நடத்தியத் தாக்குதலைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா (USA) தாக்குதல் நடத்திய பிறகு, உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான, ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது.
எரிபொருள் மற்றும் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு
ஈரானுக்கு வடக்கேயும், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு தெற்கேயும் ஹோர்முஸ் நீரிணை அமைந்துள்ளது.

சவுதி அரேபியா, ஈரான், ஈராக், குவைத் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு முதன்மை பாதையாக இது விளங்குகிறது.
ஈரானின் தடையால் பல நாடுகளில் கப்பல்கள் அந்தப் பாதையின் ஊடாக பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் எரிபொருள் மற்றும் எரிவாயுவிற்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் நிலையில் ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் சந்தையில் உடனடி தாக்கம்
இவ்வாறான நிலையில், நைஜீரியா மற்றும் வேறு சில எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளிலிருந்து மாதிரிப் பொருட்களைப் பெற்று, உள்ளூர் ஆய்வகங்களில் சோதிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் டி.ஏ. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோகத்தில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் கிட்டத்தட்ட 60 சதவீதத்தைக் கொண்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போரின் தாக்கம் உள்ளூர் சந்தையில் உடனடி தாக்கம் எதுவும் ஏற்படாது என்றும், தற்போதைய உலகளாவிய சீர்குலைவின் விளைவு இந்த ஆண்டு ஓகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திற்குள் உணரப்படும் என பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
You may like this
https://www.youtube.com/embed/LMlji7AzC5w

