முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திருகோணமலை மாநகர சபை ஆட்சி அதிகாரம் தமிழரசு வசம்

திருகோணமலை (Trincomalee) மாநகர முதல்வராக இலங்கை தமிழரசு கட்சியின் (ITAK) உறுப்பினர் கந்தசாமி செல்வராஜா (Kandasamy Selvarajah) தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

திருகோணமலை மாநகர சபை முதல்வர் தெரிவு நேற்று (23) கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, திருகோணமலை நகர சபையின் முதல்வராக இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் கந்தசாமி செல்வராஜா மற்றும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஜனித் பதுகே ஆகியோர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டது.

பகிரங்க வாக்கெடுப்பு

இதனை அடுத்து கிழக்கு மாகாண உள்ளூரட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி இருவருடைய பேர்கள் முன்மொழிக்கப்பட்டுள்ளதால் பகிரங்க வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

திருகோணமலை மாநகர சபை ஆட்சி அதிகாரம் தமிழரசு வசம் | Kandasamy Selvaraja Elected Mc Chairman

இதன்போது, முதல்வர் கந்தசாமி செல்வராஜுக்கு ஆதரவாக 19 பேரும் ஜனிக் பதுகேவுக்கு ஆதரவாக 06 பேரும் தமது விருப்பங்களை தெரிவித்தனர்.

இதனையடுத்து திருகோணமலை சபை முதல்வராக கந்தசாமி செல்வராஜா தெரிவு செய்யப்பட்டதுடன் பிரதி முதல்வராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் நைனா முஹம்மது மௌசூன் தெரிவு செய்யப்பட்டார். 

நாடாளுமன்ற உறுப்பினர் 

இதேவேளை, மூதூரில் நான்கு தசாப்களின் பின் தலைமைப் பதவியை இலங்கை தமிழரசு கட்சி கைப்பற்றியுள்ளது அது போன்று திருகோணமலை மாநகர சபையையும் கைப்பற்றியுள்ளது என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.

திருகோணமலை மாநகர சபை ஆட்சி அதிகாரம் தமிழரசு வசம் | Kandasamy Selvaraja Elected Mc Chairman

திருகோணமலை மாநகர சபை முதல்வர் தெரிவு திங்கட்கிழமை (23) இடம் பெற்றன இதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், இலங்கையில் உள்ள மாநகரங்களில் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கக் கூடிய வகையில் திருகோணமலை மாநகரத்தை எடுத்துக் காட்டுவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்