முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை வேண்டும்! சிறிலங்காவிடம் வலியுறுத்திய ஐ.நா ஆணையாளர்

இலங்கையில் இறுதிக்கட்டப்போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக் கூறப்படவேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் வோல்கர் டர்க் கொழும்பில் நடத்தப்பட்ட குழு விவாதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் போர்க்குற்றங்களை செய்தவர்களுக்கு கடந்த கால அரசாங்கங்கள் தண்டனையிலிருந்து விலக்கு அளித்த நகர்வு போல புதிய அரசாங்கம் செய்யாமல் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவேண்டும் என்ற இடித்துரைப்பை செய்த ஆணையாளர் குற்றங்களைச் செய்தவர்களுக்கு தண்டனை வழங்குவது மிக முக்கியமான நகர்வு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நினைத்துப் பார்க்க முடியாத வலி மற்றும் இழப்பைச் சந்தித்த தமிழ் மக்களுக்கும் அவர்களின் சந்ததியின் எதிர்காலத்துக்கும் பொறுப்புக்கூறல் இன்றியமையாது என்பதால் இந்த விடயத்தில் நீதி நிலைநாட்டப்படுவதை தற்போதைய அரசாங்கம் உறுதிசெய்யவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இன்று காலை தமிழர்தாயக பகுதிகளுக்குரிய பயணத்தை ஆரம்பிக்க முன்னர் அவர் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் செப்பெரம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைபேரவையில் இலங்கை குறித்து இன்னொரு தீர்மானகரமான நகர்வு எடுக்கக்கடவுள்ள நிலையில் அந்த நகர்வை நீர்த்துப்போக வைப்பதற்கு உள்ளுர் நல்லிணக்கம் என்ற பழைய தந்திரத்தை புதிய அரசாங்கம் முன்னகர்த்தும் நிலையில் இறுதிக்கட்டப்போரில் போர்க்குற்றங்களை செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படவேண்டும் என மனித உரிமை ஆணையாளர் குறிப்பிட்டுள்ள நிலையில் இந்த விடயம் உட்பட்ட விடயங்களை தாங்கிவருகிறது செய்திவீச்சு..

https://www.youtube.com/embed/eglI0ZYfeRA

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்