எனது பதவி பறிபோகும் பட்சத்தில் சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரனுக்கு (Kaushalya Narendran) அந்த நாடாளுமன்ற பதவி கிடைக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் (Ramanathan Archchuna) தெரிவித்துள்ளார்.
அர்ச்சுனா பதவியை இடைநிறுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்றையதினம் (26) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்ற பதவி என்னிடம் இருந்தாலும் ஒன்றுதான் கௌசல்யாவிடம் இருந்தாலும் ஒன்றுதான்.
கௌசல்யா நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படும் பட்சத்தில் எனக்கு முழு நேரம் மக்களிடம் சேவை ஆற்றுவதற்கு நேரம் கிடைக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.
https://www.youtube.com/embed/sqt2ZAMTltE?start=123

