முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரஷ்யாவில் கொடூரமாக தாக்கப்பட்ட ஈரானிய சிறுவன்: உயிருக்கு போராடும் பரிதாப நிலை

ரஷ்யாவில் (Russia) ஈரானிய (Iran) குழந்தையை தாக்கிய நபர் மீது தொடர் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல் (Israel) – ஈரான் இடையே 12 நாள்களாகப் போர் நீடித்த நிலையில், கடந்த திங்கள்கிழமை அதிகாலை முதல் போர் முடிவுக்கு வந்தது.

இந்தநிலையில், போரின் காரணமாக ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ரஷ்யாவுக்கு செல்ல நேரிட்டுள்ளது.

கர்ப்பிணித் தாய்

இதையடுத்து, ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோ விமான நிலையத்தை அவர்கள் சென்றடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் கொடூரமாக தாக்கப்பட்ட ஈரானிய சிறுவன்: உயிருக்கு போராடும் பரிதாப நிலை | Russian Man Attacks Iranian Child At Airport

அங்கு தனது இரண்டு வயது மகனுடன் செல்ல குறித்த குடும்பத்தை சேர்ந்த கர்ப்பிணித் தாய் ஒருவர் தயாராகி கொண்டிருந்துள்ளார்.

மண்டை ஓடு 

இதன்போது, அந்த சமயத்தில் சிறுவன் அருகே நின்று கொண்டிருந்த ரஷ்யர் ஒருவர், அந்தப் பகுதியில் யாரும் இல்லை என்பதை கவனித்துவிட்டு சிறுவனைத் தூக்கி தரையில் பலமாக வீசியுள்ளார்.

ரஷ்யாவில் கொடூரமாக தாக்கப்பட்ட ஈரானிய சிறுவன்: உயிருக்கு போராடும் பரிதாப நிலை | Russian Man Attacks Iranian Child At Airport

இந்தக் கொடூரத் தாக்குதலில் சிறுவனின் மண்டை ஓடு எலும்பு முறிந்ததுடன், முதுகுத் தண்டிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இதையடுத்து, சிறுவன் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியவரைக் கண்ட விமான நிலைய ஊழியர்கள், அவரை கைது செய்துள்ளனர்.

கொடூரத் தாக்குதல் 

இதனைத் தொடர்ந்து, மயக்கமடைந்திருந்த சிறுவனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கோமா நிலைக்கு சிறுவன் சென்றுள்ளதாகவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் கொடூரமாக தாக்கப்பட்ட ஈரானிய சிறுவன்: உயிருக்கு போராடும் பரிதாப நிலை | Russian Man Attacks Iranian Child At Airport

கைது செய்யப்பட்டவர் விளாதிமிர் விட்கோவ் (31) என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சிறுவன் மீதான கொடூரத் தாக்குதல் இனவெறி அடிப்படையிலா ? வேறு ஏதேனும் உள்நோக்கத்துடன் நடத்தப்பட்டதா ? என்ற கோணத்தில் அவரிடம் விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்