முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வடக்கு மாகாணம் குறித்த உலக வங்கியின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

உலக வங்கியால் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள
அபிவிருத்திப் பணிகளின் தொடர் நடவடிக்கைக்காக இணைப்புக் குழுவொன்று நேற்று கலந்துரையாடலில் முன்மொழியப்பட்டுள்ளது.

உலக வங்கியின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி தலைமையிலான குழுவினருக்கும் வடக்கு அதிகாரிகள் குழுவினருக்கும் இடையிலான
கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று (29.06.2025)
நடைபெற்றது.

இதன்போது உரையாற்றிய அமைச்சர்
சந்திரசேகரன், எமது மாகாணத்தைக் கட்டியெழுப்ப உலக வங்கி கரம் கொடுத்து உதவ
வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்தார்.

அமைச்சர் பிமல் ரத்நாயக்க,
அரசாங்கத்தின் சார்பில் உலக வங்கியின் முயற்சிக்கு நன்றிகளைத் தெரிவித்தார்.

8 வலயங்கள்

உலக வங்கியால் வடக்கு மாகாணத்திற்கு பல தடவைகள் மேற்கொள்ளப்பட்ட பயணம் மற்றும்
அதிகாரிகள், மக்கள் சமூகங்களுடனான கலந்துரையாடலின் அடிப்படையில் வடக்கு
மாகாணத்தில் 8 வலயங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

வடக்கு மாகாணம் குறித்த உலக வங்கியின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் | World Bank Northern Province Development Projects

கிழக்கு மாகாணத்தில் 7
வலயங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

யாழ். மாவட்டத்தில் 3 வலயங்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 2 வலயங்களும்
வடக்கின் ஏனைய 3 மாவட்டங்களில் தலா ஒரு வலயங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை இணைக்கும் கொக்கிளாய் பாலமும்
முன்மொழிவாக உள்ளடக்கப்பட்டுள்ளது.

முக்கிய திட்டங்கள் 

உலக வங்கியால் விவசாயம், கடற்றொழில்,
சுற்றுலாத்துறை, தொழில்நுட்பம் ஆகிய 4 விடயப் பரப்புக்களின் கீழ்
செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் வடக்கு – கிழக்கு
மாகாணத்தின் முதல் கட்ட செயற்படுத்தலுக்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி
ஒதுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணம் குறித்த உலக வங்கியின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் | World Bank Northern Province Development Projects

இந்தக் கலந்துரையாடலில் ஒவ்வொரு மாவட்டங்களினதும் மாவட்டச் செயலர்கள் தங்களது
மேலதிக தேவைப்படுத்தல்களையும் முன்வைத்தனர்.

எதிர்காலத்தில் உலக வங்கியால்
அவற்றை கவனத்திலெடுக்குமாறும் கோரிக்கை முன்வைத்தனர்.

உலக வங்கியின்
செயற்றிட்டத்தை தொய்வின்றி விரைவாக செயற்படுத்துவதற்காக இணைப்புக்குழுவொன்றும்
முன்மொழியப்பட்டது. அந்தக் குழு அடுத்த கட்ட நடவடிக்கைகளை விரைந்து
முன்னெடுப்பது என்று இன்றைய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.