முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அமெரிக்காவிலும் தலைதூக்கும் வாரிசு அரசியல் : அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்பின் மகனும் போட்டி…!

 அமெரிக்காவில் கென்னடி குடும்பம், புஷ் குடும்பம், கிளின்டன் குடும்பம் போன்றவை தலைமையில் தலைமுறை அரசியல் நிகழ்ந்திருக்கிறது

 அதேபோன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மகனும் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரா என்று ஊடகங்கள் கேள்வி எழுப்பி வருகின்றன.

2029 ஆம் ஆண்டில் நிறைவுக்கு வரும் ட்ரம்ப்பின் ஜனாதிபதி சகாப்தம் 

அமெரிக்காவில் ஜனாதிபதிகளின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் மட்டுமே. மேலும், இருமுறைக்குமேல் ஒருவர் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியாது. அந்த வகையில், 2029 ஆம் ஆண்டில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஜனாதிபதி சகாப்தம் முடிவடைந்து விடும்.

அமெரிக்காவிலும் தலைதூக்கும் வாரிசு அரசியல் : அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்பின் மகனும் போட்டி…! | Trumps Son To Run In Next Presidential Election

அவருக்குப் பிறகு, அவரது கட்சியில் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அதிகரித்து வருவதால், அடுத்த ஜனாதிபதி தேர்தல் எப்படி இருக்கும் என்பதில் ஆவல்தான் அதிகமாய் உள்ளது.

எரிக் ட்ரம்ப்பும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவாரா 

இந்த நிலையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மகன் எரிக் ட்ரம்ப்பும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவாரா என்ற கேள்வியும் செய்தி நிறுவனங்களில் பேசுபொருளாகி உள்ளது.

அமெரிக்காவிலும் தலைதூக்கும் வாரிசு அரசியல் : அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்பின் மகனும் போட்டி…! | Trumps Son To Run In Next Presidential Election

இதுகுறித்து, எரிக் ட்ரம்ப்பிடம் ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்று, உங்கள் குடும்பத்தினரையும் இதில் (அரசியலில்) கொண்டுவர நினைக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த அவர், கடந்த 10 ஆண்டுகளாக நான் அனுபவித்ததை என் குழந்தைகளும் அனுபவிக்க வேண்டுமா? என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், பொது வாழ்க்கையில் நுழைவது குறித்து எந்த முடிவும் இன்னும் மேற்கொள்ளவில்லை. இருப்பினும், அரசியல் பாதை எனக்கு எளிதானதே. காலம் சொல்லும்.

அரசியலில் பணம் சம்பாதிக்காத ஒரு குடும்பம்

ஆனால், என்னைவிட அதிகமானோர் அங்கே உள்ளனர். அரசியலில் பணம் சம்பாதிக்காத ஒரு குடும்பம் உள்ளதென்றால், அது ட்ரம்ப் குடும்பம் மட்டுமே என்று தெரிவித்தார்.

அமெரிக்காவிலும் தலைதூக்கும் வாரிசு அரசியல் : அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்பின் மகனும் போட்டி…! | Trumps Son To Run In Next Presidential Election

ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட வாய்ப்புக்காக, சட்ட ரீதியிலான செலவுகள் மற்றும் பல்வேறு விசாரணைகளுக்காக மட்டுமே 500 மில்லியன் டொலரை ட்ரம்ப் குடும்பம் செலவிட்டதாகவும் கூறினார்.

ட்ரம்ப் குடும்பத்தின் வணிக செயல்பாடுகளை எரிக் ட்ரம்ப்தான் கவனித்து வருகிறார். ட்ரம்ப் அமைப்பின் மதிப்பை 8 பில்லியன் டொலரிலிருந்து 12 பில்லியன் டொலராக எரிக் ட்ரம்ப்தான் உயர்த்தினார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.