அகில இலங்கை மக்கள்
காங்கிரஸ் தனித்து நின்று போட்டியிட்டு இருந்தால் 250க்கும் மேற்பட்ட ஆசனங்களை பெற்றிருப்பார்கள் என முன்னால் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்
தெரிவித்துள்ளார்.
கிண்ணியாவில் நேற்று (30) மாலை அவரது இல்லத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தை
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்பொழுது பெற்ற 140 ஆசனங்களில் கூட எந்த தலைமைகளோடும் பேச்சுவார்த்தை
நடத்தாமல் அவர்கள் சார்ந்த ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்
பிரேமதாசவுடனும் , அநுரகுமாரவுடனும் பேசி ஒப்பந்தம் செய்திருந்தால் தனித்து
பல சபைகளை ஆட்சியமைத்திருப்பார்கள்.

எதிர்காலத்தில் உள்ளூராட்சி சபை,மாகாண சபை தனித்துவமாக தனிச்சின்னத்திலே
போட்டியிடுவதன் மூலமாகவே பேரம் பேசுகின்ற தன்மைக்கும் சமூகத்தின் உரிமைக்கும்
குரல் கொடுக்க முடியும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

