தமிழ் மக்களினுடைய மனதினில் இருக்கின்ற வலிகளை தற்போதைய அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்தோடு, நாட்டை இரண்டாக பிளவு பட வைக்க வேண்டிய நோக்கம் மக்களுக்கு இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்றையதினம்(30) நாடாளுமன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஐ.நா மனித உரிமைகள் ஆணைாயளர் வோல்கர் டர்க் செம்மணி மனிதப் புதைகுழி பகுதிக்கு விஜயம் செய்த போது அவர் உடனடியாக அங்கிருந்து வெளியேறும் படி வாகனம் தயார் நிலையில் இருந்ததாகவும் அர்ச்சுனா கூறியுள்ளார்.
இந்தநிலையில், தாம் ஐ.நா செயலாளருடன் கலந்துரையாடி தாம் மக்களுடன் உரையாடுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசியல் செய்வது இலகு. மக்கள் தமது வலிகளை புரிந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுப்பதாகவும் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

