முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கடும் வெம்மையால் மூடப்பட்ட ஈபில் கோபுரம் – பிரித்தானியா சுவிஸிலும் கடும் தகிப்பு

மத்தியதரைக் கடலில் ஏற்பட்ட வெப்ப அலை, ஐரோப்பாவில் (Europe) தொடர்ந்தும் நீடிக்கும் நிலையில் இன்று பிரான்சில் பல பிராந்தியங்கள் சிவப்பு எச்சரிக்கையில் கடக்கின்றன.

2000 க்கு மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன. அதேபோல பரிஸில் உல்லாசப்பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடமான ஈபில் கோபுரத்தின் மேல் பகுதிகள் நாளை வரை பார்வையாளர்களுக்கு மூடப்பட்டுள்ளன.

பரிஸ் நகரம் நாளை இரவு 10 மணி வரை சிவப்பு எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு முழுவதும் அனைத்து பொதுப் பூங்காக்கள் மற்றும் தோட்டங்களும் திறந்திருக்கும் என்றும் நகராட்சி அறிவித்துள்ளது.

வானிலை முன்னறிவிப்பு

இன்றும் பிரித்தானியா சுவிஸ் (Switzerland) உட்பட்ட பலநாடுகளில் வெப்பம் தீவிரப்பட்டுள்ள நிலையில் நாளையும் இதனை ஒத்த வெப்பம் நிலவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடும் வெம்மையால் மூடப்பட்ட ஈபில் கோபுரம் - பிரித்தானியா சுவிஸிலும் கடும் தகிப்பு | Eiffel Tower Closed Due To Extreme Heat

லண்டன் உட்பட்ட, நகரங்களில் வெப்பநிலை 33 பாகை செல்சியசை கடந்துள்ளது. தற்போதைய வெப்ப அலை மில்லியன் கணக்கான ஐரோப்பிய மக்களை அதிக வெப்ப அழுத்தத்திற்கு ஆளாக்கியுள்ளதாக ஐரோப்பிய வானிலை முன்னறிவிப்பு மையங்கள் அறிவித்துள்ளன.

வெப்பநிலை அதிகரித்தால் பல நாடுகளில் காட்டுத்தீ பரவி துருக்கியில், மேற்கு இஸ்மிர் மற்றும் மனிசா மாகாணங்களில் ஏற்பட்ட காட்டுத்தீயால் 50,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கடும் வெம்மையால் மூடப்பட்ட ஈபில் கோபுரம் - பிரித்தானியா சுவிஸிலும் கடும் தகிப்பு | Eiffel Tower Closed Due To Extreme Heat

தற்போதைய வெப்பக் குவிமாடம் கிழக்கு நோக்கி விரிவடைவதால் ஜேர்மனியில் நாளை வெப்பநிலையில் தணிவு ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

உலகின் பருவநிலை மாற்றம் ஐரோப்பாவை வேகமாக வெப்பமடைய வைக்கும் கண்டமாக மாற்றுவதான கவலைகள் உள்ள நிலையில் உலகின் ஏகைய பகுதிகளை விட ஐரோப்பியக்கண்டம் இரண்டு மடங்கு வேகத்தில் வெப்பமடைவதை தற்போதைய நிலைமையும் ஆதாரப்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்