ஸ்பெயினின் (Spain) ஸமோரா மாகாணத்தில் நடந்த கார் விபத்தில் பிரபல கால்பந்து வீரர் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்தில் போர்த்துகல் கால்பந்து வீரர்கள் டியாகோ ஜோட்டா (Diogo Jota ) மற்றும் அவரது சகோதரரான ஆன்ட்ரூ சில்வா ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
இங்கிலாந்தின் (UK) லிவர்புல் அணிக்காக போர்த்துகல் வீரர் தியாகோ ஜோட்டா விளையாடி வந்தார்.
இரசிகர்கள் அதிர்ச்சி
இவர் தனது லம்போர்கினி காரில் பயணித்துக் கொண்டிருந்த போது டயர் வெடித்து மற்றொரு கார் மீது மோதி தீப்பிடித்ததில் 2 பேரும் பலியாகினர்.

ஜோட்டாவின் மரணம் கால்பந்து உலகை உலுக்கியுள்ளது. இரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
28 வயதான டியாகோ ஜோட்டா 2019 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் UEFA நேஷன்ஸ் லீக்கை வென்ற போர்ச்சுகல் அணியில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

