முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பறந்து போ திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக கொடுத்து வரும் ராம், இந்த முறை பெற்றோர்கள்-குழந்தைகளுக்கான ஒரு பீல் குட் ட்ராமவை பறந்து போ என்ற படம் மூலம் கொடுத்துள்ளார், அவரின் நோக்கம் நிறைவேறியதா? பார்ப்போம். 

பறந்து போ திரை விமர்சனம் | Paranthu Po Movie Review

கதைக்களம்

சிவா, கிரேஸ் கணவன், மனைவி இருவரும் மதம் மாறி திருமணம் செய்கிறார்கள். அதனாலேயே பெற்றோர்கள் ஆதரவு இல்லாமல் சென்னையில் இருக்க, அப்பார்ட்மெண்ட் வாழ்க்கை, பையனை மிகப்பெரிய ஆட்கள் படிக்க வைக்கும் பள்ளி, பைக் கூட EMI என வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

பெற்றோர்கள் இருவரும் வேலைகாக வேறு வேறு இடத்தில் இருக்க, பையனை 4 சுவர்களுக்குள் அடைத்து வைத்து விட்டு, இண்டர்நெட் தான் உலகம் என்பது போல் அந்த பையனும் வளர்கிறான்.

பறந்து போ திரை விமர்சனம் | Paranthu Po Movie Review

ஒரு நாள் அப்பாவுடன் வெளியே வரும் போது EMI காரனுக்கு பயந்து சிவா தன் பையனை அழைத்துக்கொண்டு தன் பொற்றோர் வீட்டுக்கு பைக்-லேயே செல்கிறார்.

அப்படி செல்லும் போது இவர்கள் சந்திக்கும் இடம், மனிதர்கள், மகனின் தவிப்பு, ஆசை, ஆர்வம், விருப்பம், நாம் எந்த மாதிரி வாழ்கை வாழ்கிறோம் என்பதன் பயனமாகவே இந்த பறந்து போ செல்கிறது. 

பறந்து போ திரை விமர்சனம் | Paranthu Po Movie Review

படத்தை பற்றிய அலசல்

சிவா திரையில் தோன்றினாலே சிரிப்பு வரும் பலருக்கு, அவரை வைத்து பெரிய எமோஷ்னல் ட்ரை பண்ணுவேன் என்றில்லாமல் அவரின் ஹியுமர் சென்ஸை பயன்படுத்தி எமோஷ்னல் கதபாத்திரம் கொடுத்ததிற்கு ராம்-க்கு ஒரு பூங்கொத்து.

அதையும் சிவா அவ்வளவு அழகாக் செய்துள்ளார், தன் மகனை கோபமாக அடித்துவிட்டு, பிறகு அவன் சாப்பிடமாட்டேன் என சொல்லிவிட்டு சிவா வைத்துள்ள நூடல்ஸை சாப்பிட்டதும் சிரித்து கடந்து செல்வது என சிவா செம ஸ்கோர் செய்துள்ளார்.

பறந்து போ திரை விமர்சனம் | Paranthu Po Movie Review

படமே ஒரு அப்பா-அம்மா-மகன் இவர்கள் மூலம் நமக்கு என்ன சொல்ல வருகிறது என்பதே திரைக்கதையாக ராம் கொடுத்துள்ளார், அதில் EMI அடைக்க ஓடும் இந்த உலகில் குழந்தைகளுடன் நாம் எவ்வளவு நேரம் எப்படியெல்லாம் செலவிட வேண்டும் என்பதன் அர்த்ததை ராம் மிக அழகாக காட்டியுள்ளார்.

தன் சிறு வயது க்ரஸ் அஞ்சலி வீட்டிற்கு செல்லும் சிவா, அங்கு அஞ்சலி கணவர் அஜு வர்கீஸ் நடத்தும் ஹோட்டல், நிறைய பேர் ஹோட்டலில் சாப்பிட்டாலும் எனக்கு இந்த காசு போதும் அதனால் இவ்வளவு தான் தினமும் செய்வேன் என கூறுமிடத்திலிருந்து எதோ புத்தருக்கு போதி மரம் போல் ஒவ்வொரு காட்சியும் நமக்கு பாடமாக அமைகிறது.

பறந்து போ திரை விமர்சனம் | Paranthu Po Movie Review

3BHK திரைவிமர்சனம்

3BHK திரைவிமர்சனம்

சரி காடு, மழை, சின்ன ஹோட்டல் என்று ஒருவர் வாழ்க்கை இருக்க, அன்பு(சிவா மகன்) பள்ளி தோழி ஜென்னா வீடோ மிகப்பெரும் மாளிகை, அங்குள்ளவர்கள் கூட தங்கள் குழந்தைகளுகாக நேரம் செலவிடுகிறார்கள் எதோ ஒரு விதத்தில், அங்கு தன் மகன் முன்பு தோற்ற விட கூடாது சிவா போடும் ஆட்டம் என அனைத்து காட்சியும் ரசனை தான்.

வாத்து முட்டை தான் நமக்கு கிடைப்பது, அதிலிருந்து டைனோசர் வராது என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால், அதில் டைனோசர் வரும் என நம்புவதே தானே சுவார்ஸ்யம் என ஹீரோயின் க்ரஸ் பேசும் வசனம் ஒவ்வொரு மிடில் க்ளாஸ் மக்களின் பிரதிபலிப்பு தான்.

பறந்து போ திரை விமர்சனம் | Paranthu Po Movie Review

அன்பு செய்யும் சேட்டைகள் வழியாக கொஞ்சம் கொஞ்சமாக சிவா-க்ரேஸ் இருவரும் தங்கள் வாழ்க்கையை தெரிந்துக்கொள்ள, நாமும் அதன் மூலம் பல விஷயங்களை தெரிந்துக் கொள்ளலாம்.

அதிலுன் கிளைமேக்ஸில் அன்புவை தேடி ஓடும் இடம், கொஞ்சம் சலிப்பு தட்டினாலும் உடனே அங்கு ஒரு நகைச்சுவை தட்டிவிட்டு ராம் நம்மை ஹோல்ட் செய்கிறார்.

படம் முழுவதுமே பாடல்கள் நிறைந்து உள்ளது, பாடல்கள் வழியாகவே தான் கதை நகர்கிறது, இது ஒரு சிலருக்கு கொஞ்சம் என்னடா இது என்று இருக்கலாம்.

டெக்னிக்கலாக படம் ஏகம்பரம் ஒளிப்பதிவு, சந்தோஷ் பாடல்கள், யுவன் பின்னணி இசை என அனைத்தும் அருமை. 

பறந்து போ திரை விமர்சனம் | Paranthu Po Movie Review

க்ளாப்ஸ்

அனைவரின் நடிப்பும்.

படத்தின் வசனம் மற்றும் திரைக்கதை

பல்ப்ஸ்

கிளைமேக்ஸ் அன்பு பெற்றோர்களை ஓட விடுவது, கொஞ்சம் அட என்னப்பா இது திரும்ப திரும்ப என தோன்ற வைக்கிறது.

மொத்தத்தில் குடும்பத்துடன் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய பாடமே இந்த பறந்து போ படம்.

பறந்து போ திரை விமர்சனம் | Paranthu Po Movie Review

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.