முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் மக்களின் காணிகள் குறிவைக்கும் கடற்படை! அம்பலப்படுத்தும் முக்கியஸ்தர்

யாழ். வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் J/435 கிராம சேவகர் பிரிவில் மக்களின்
காணிகள் இரகசியமான முறையில் கடற்படையால் அளவீடு செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண
காணிக்கான மக்கள் உரிமை இயக்கத்தின் தலைவர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

தனது இல்லத்தில் வைத்து இன்று(6) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கவில்லையே
மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்,

கிழக்கு சுண்டிக் குளம் பகுதி

“யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு சுண்டிக் குளம் பகுதியான J/ 435கிராம சேவகர்
பிரிவில் அமைந்திருக்கின்ற மக்களின் மீன்பிடி நிலங்கள்,மக்களுக்குரிய காணிகள்
திருகோணமலையில் இருந்து வந்த கடற்படையின் ஒரு குழுவால் மிக இரகசியமாக அளவீடு
செய்யப்பட்டுள்ளது.

யாழில் மக்களின் காணிகள் குறிவைக்கும் கடற்படை! அம்பலப்படுத்தும் முக்கியஸ்தர் | Navy Jaffna Land

தங்களுடைய சொந்தக்காணிகள் கடற் படையினரால் அளவீடு செய்யப்படுவதை அறிந்த அங்கு
இருந்த ஒரு சில மக்கள் கடற்படை இடம் கேள்வி எழுப்பிய போது உங்களுடைய காணி
என்றால் அனுமதி பத்திரத்தை காட்டுமாறு தெரிவித்ததாக மக்கள் கூறுகின்றனர்.

சுண்டிக்குள பகுதியில் காணப்படும் அதிகளவான காணிகள் அரசகாணிகளாக
காணப்படுகிறது, அங்கே வசித்த மக்களின் காணிகளுக்கு உறுதி இருக்காது மக்கள்
காலா காலம் அந்த காணியில் வாழ்ந்து வந்தார்கள்.

மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள்

ஆனால் அவர்கள் வாழ்ந்த காணியை தற்பொழுது சுவிகரிப்பதற்காக கடற்படை
முயற்சிக்கின்றது.

யாழில் மக்களின் காணிகள் குறிவைக்கும் கடற்படை! அம்பலப்படுத்தும் முக்கியஸ்தர் | Navy Jaffna Land

 அந்த பகுதியில் மக்கள் நீண்ட காலமாக வாழ்ந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன
வீடுகள்,கிணறுகள், அங்கே மக்களால் பராமரிக்கப்பட்ட மரங்களும் இருக்கின்றன.

இது தொடர்பாக அப்பகுதி கிராம அலுவலருக்கோ ,வடமாட்சி கிழக்கு பிரதேச
செயலருக்கோ தெரியப்படுத்தப்படவில்லை.” என கூறியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்