முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ட்ரம்பின் அச்சுறுத்தலுக்கு ஒன்று சேர பதிலடி கொடுத்த ரஷ்யா, சீனா

பிரிக்ஸ்(BRICS) கூட்டணி நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த வரி அச்சுறுத்தல்களுக்கு சீனா மற்றும் ரஷ்யா கண்டனங்களை வெளியிட்டுள்ளன.

பிரிக்ஸ் நாடுகள் மோதலுக்கான குழுவல்ல, எந்தவொரு மூன்றாவது நாட்டையும் குறிவைக்கும் நோக்கமும் இல்லை என்று சீனா தெரிவித்துள்ளது.

அதன்போது, வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் அபிவிருத்தி பெறும் நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பிற்கான முக்கியமான மேடையாக பிரிக்ஸ் உள்ளது என சீன வெளிவிவகாரத்துறை பேச்சாளர் மாவ் நிங் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனா எதிர்ப்பு 

டொனால்ட் ட்ரம்ப், பிரிக்ஸ் நாடுகள் மற்றும் அவற்றுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளுக்கு கூடுதல் 10% வரி விதிப்பதாக கூறியதற்கு பதிலளிக்க வகையில் அவின் இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளது.

ட்ரம்பின் அச்சுறுத்தலுக்கு ஒன்று சேர பதிலடி கொடுத்த ரஷ்யா, சீனா | Trump Tariff Threat To Brics China Russia Defends

அது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட மாவ் நிங், “வர்த்தகப் போரும், வரிவிதிப்பு போரும் எந்தவிதமான வெற்றியையும் தராது.

வரிகளை மற்றவர்களை கட்டாயப்படுத்தும் ஒரு கருவியாகப் பயன்படுத்துவதற்கு சீனா எதிர்ப்பு தெரிவிக்கிறது.இது எந்தவொரு தரப்புக்கும் பயனளிக்காது” என குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவின் பதில்

இதேவேளை, ட்ரம்பின் வரி அச்சுறுத்தில் குறித்து கிறெம்லின் (ரஷ்ய ஜனாதிபதி அலுவலகம்) தெரிவித்ததாவது, பிரிக்ஸ் நாடுகள் வேறு எந்த நாட்டையும் பாதிப்பதற்கோ, பாதிக்க முயற்சிப்பதற்கோ ஒருபோதும் செயல்படவில்லை.

ட்ரம்பின் அச்சுறுத்தலுக்கு ஒன்று சேர பதிலடி கொடுத்த ரஷ்யா, சீனா | Trump Tariff Threat To Brics China Russia Defends

ட்ரம்பின் அந்தக் கருத்துகள் நமக்கு தெரியும்.ஆனால் பிரிக்ஸ் நாடுகளின் தனித்துவம் என்னவென்றால், அவை ஒரே மாதிரியான அணுகுமுறைகளையும், ஒத்த உலகக் கோணத்தையும் பகிர்ந்து கொள்கின்றன.

அந்த ஒத்துழைப்பு எப்போதும் தங்கள் சொந்த நலன்களில்தான் அமைகிறது. அது ஒரு மூன்றாவது நாட்டுக்கு எதிராக ஒரு செயல் முறைதான் என்றால், அது தவறான புரிதல்” என தெரிவித்துள்ளது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்