முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அநுர அரசாங்கத்திலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மர்ம வலையமைப்பு!

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக்குண்டுத்தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட வலையமைப்பு இந்த அரசாங்கத்துக்குள் இன்னும் செயற்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டை சிறிலங்காவின் நாடாளுமன்றின் எதிர்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் முன்வைத்துள்ளார்.

சாய்ந்தமருது பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் அங்கிருந்தவர்களில் ஒரு சிலர் உயிர் தப்பியிருந்தனர் என்றும், அவர்களில் சஹ்ரானின் மனைவியும் ஒருவர் எனவும் பகிரங்க கருத்தொன்றையும் கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

“சஹ்ரானின் மனைவி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கும்போது, சாராவை ஒருவர் துக்கிச்செல்வதைகண்டதாக குறிப்பிட்டிருக்கிறார்.

Easter Sunday attacker Sara is alive

அப்படியானால் சாராவை யார் தூக்கிச்சென்றதை அறிந்துகொள்ள வேண்டும் என்றால், மேஜர் சுபசிங்கவிடம் கேளுங்கள்.

அப்போது கிழக்கு மாகாண கட்டளைத்தளதியாக இருந்தவர் அரசாங்கத்தின் தற்போதைய பிரதி பாதுகாப்பு அமைச்சர் அநுர ஜயசேகரவே.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஒரு சதித்திட்டம். அரசின் ஒரு பகுதியினர் இந்த சம்பவத்துடன் இருந்துள்ளனர். அதனால் இந்த தாக்குதலின் சூத்திரதாரிகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற விடயத்தில் நாங்களும் அரசாங்கமும் ஒரு நிலைப்பாட்டிலே இருக்கிறாேம்.

இதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்த தாக்குதலுக்கு பின்னால் இருந்த அரசுக்குள் இருந்தவர்களை கண்டுபிடிப்பதாக தேர்தல் காலத்தில் நாங்களும் மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தோம். ஜனாதிபதியும் வாக்குறுதியளித்திருந்தார்.

என்றாலும் மக்கள் இந்த தாக்குதலின் சூத்திரதாரியை கண்டுபிடிக்கும் பொறுப்பை இந்த அரசாங்கத்துக்கு வழங்கினார்கள்.

ஆனால் அரசாங்கம் இந்த தாக்குதலின் சூத்திரதாரியை வெளிப்படுத்துவதாக தெரிவித்தபோதும் அதனை மேற்கொள்ளவில்லை.

சாரா உயிருடன்

அப்போதைய அரசு சஹ்ரானுக்கு உதவி செய்தார்கள் என்பது தற்போதைய ஜனாதிபதிக்கும் தெரியும் என்பது எங்களுக்கும் தெரியும்.

சூத்திரதாரியை கண்டுபிடிப்பதாகவே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் அதனை செய்வதற்கு பதிலாக விசாரணை செய்யவந்த அதிகாரிகள் 700பேர் வரையானவர்களை இடமாற்றினார். ஷானி அபேசேகரவை சிறையில் அடைத்தார். ரவி செனவிரத்னவை வீட்டுக்கு அனுப்பினார். 

Easter Sunday attacker Sara is alive

மேலும், தற்போது அரசில் இருந்த ஒருசிலரை விசாரிக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்து வருகிறார்.

அத்தோடு, சாரா உயிருடன்தான் இருக்கிறார்.

சாரா மரணித்துள்ளார் என தெரிவிப்பதற்கு கடந்த அரசாங்கம் முயற்சித்து வந்தது. அதற்காக மூன்று தடவை டீ,என்.ஏ. பரிசோதனை நடத்தினார்கள். இரண்டு பரிசோதனைகளிலும் சாரா உயிரோடு இருப்பதாகவே தெரிவிக்கப்பட்டது.

ஆனால் சாரா உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கும் பொய் பரிசோதனை அறிக்கையை பெறுவதற்கு சென்றவர்தான் தற்போதைய பதில் காவல்துறைமா அதிபர் விக்ரமரத்ன.

அவருடன் யார் சென்றார் என்பதை விக்ரமரத்னவிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். அதாவது இந்த தாக்குதலுக்கு சம்பந்தப்பட்ட வலையமைப்பு இந்த அரசாங்கத்துக்குள் இன்னும் செயற்பட்டு வருகிறது.

ஐ.எஸ்.ஐ.எஸ்க்கு மின்னஞ்சல் 

இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் போரா இனத்தவர்களின் மத நிகழ்வொன்று பம்பலப்பிட்டியவில் இடம்பெற்றது. அங்கு ஒருவர் சென்று படம் பிடித்தார்.

Easter Sunday attacker Sara is alive

அதன்போது அவரை அங்கிருந்த காவல்துறையினர் கைது பம்பலப்பிடிய காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விிசாரணை மேற்கொண்டபோது, அவர்தான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின்போது, சஹ்ரானின் குழுவில் இருந்த பொடி சஹ்ரான் என்ற ஒருவர்.

அவர்தான் சொனிக் சொனிக் உடன் செயற்பட்டு. ஐ.எஸ்.ஐ.எஸ்க்கு மின்னஞ்சல் அனுப்பியவர். இவர் தற்போது நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையிலே பாேரா இனத்தவர்களின் விாழவுக்கு சென்று அங்கு படம்பிடித்துள்ளார்.

அவர் கடந்த மாதம் 28ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு இந்த மாதம் முதலாம் திகதி விடுவிக்கப்படுகிறார். எப்படி அவ்வாறு செய்ய முடியும்.

இஸ்ரேலுக்கு எதிரான படம் கையடக்க தொலைபேசியில் இருந்தமைக்காக ஒரு இளைஞன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார்.

எமது நாட்டில் இருக்கும் காவல்துறை இஸ்ரேலின் மொசாடா என கேட்கிறேன்.

பொடி சஹ்ரானை எந்த பிரச்சினையும் இல்லாமல் விடுவிக்கிறார்கள்.இதன் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் வலையமைப்பு அரசுக்குள் இன்னும் செயற்படுகிறது என்பது தெளிவாகிறது” என கூறியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.