முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சாராவுக்கு முதல் செவ்வந்தி எங்கே..? செம்மணிக்கு ஏன் செல்லவில்லை..? அநுர அரசாங்கத்திடம் கேள்வி

சாரா ஜெஸ்மினை கண்டுபிடிப்பதற்கு முன்னர், இரேஷா செவ்வந்தியை கண்டுபிடியுங்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அரசாங்கத்திற்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பதற்றமடைந்த அரசாங்கம்

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

சாராவை கண்டுபிடிப்போம் என தெரிவிக்கும் இந்த அரசாங்கம், நீதிமன்றத்திற்குள் சென்று பகிரங்கமாக ஒருவரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்ற குற்றவாளிக்கு உறுதுணையாக இருந்த இரேஷா செவ்வந்தியை இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

அவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் நீங்கள் பதற்றமடைந்ததை நாங்கள் பார்த்தோம். அது இன்றுவரை தொடர்கிறது. எப்படியாவது செவ்வந்தியை கண்டுபிடியுங்கள்.

அதேபோல, வடக்கில் செம்மணியில் கொன்று குவிக்கப்பட்டவர்களின் எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

நாளுக்கு நாள் உயிரிழந்தவர்களின் எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்படுகின்றன. பச்சிளம் குழந்தைகள், சிறார்கள் அவர்களுடைய விளையாட்டுப் பொருட்களோடு சேர்த்து கொன்று புதைக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு நாளும் இந்த எலும்புக்கூடுகள் மீட்கப்படுவது தமிழ் பத்திரிகைகளில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ஆனால், தென்னிலங்கை பத்திரிகைகளில் அவ்வாறு இல்லை. ஏதாவது மூலையில் ஒரு செய்தி வருகின்றதே தவிர அதன் தீவிரத் தன்மையை எந்த பத்திரிகையும் வெளியிடவில்லை.

சாராவுக்கு முதல் செவ்வந்தி எங்கே..? செம்மணிக்கு ஏன் செல்லவில்லை..? அநுர அரசாங்கத்திடம் கேள்வி | Sara Jesmin Iresha Sewwandi Missing Case

ஒரு சில சிங்கள யூடியூபர்கள் செம்மணிக்கு நேரடியாகச் சென்று, பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர் அகழ்வுப் பணியில் ஈடுபடுவதை நேரடியாகப் பார்த்து, அந்தப் பகுதியை ஆய்வு செய்து காணொளிகளைப் பதிவேற்றியுள்ளனர்.

அவர்களின் தகவலுக்கு அமைய, குறித்த இடத்திற்கு இதுவரை அரசாங்கம் சார்பாக எந்தவொரு தரப்பினரும் செல்லவில்லை என்பது தெளிவாகின்றது.

காணாமல் போனோர் அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் எங்கே இருக்கின்றனர். ஏன் செம்மணிக்குச் செல்லவில்லை. அங்கு பலர் கொன்று புதைக்கப்பட்டிருக்கின்றமை தெரியவில்லையா.. என கேள்வி எழுப்பியுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.