முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அலி ஹசன் சலாமேவை அழிப்பதில் வெற்றிகண்ட மொசாட்டின் பெண் உளவாளி!

பிளாக் செப்டம்பர் அமைப்பின் தலைவர் மற்றும் மியூனிக் ஒலிம்பிக் படுகொலைகளுக்கு முக்கிய காரணமான அலி ஹசன் சலாமே (Ali Hassan Salameh) படுகொலை என்பது  மொசாட்டின் வரலாற்று பதிவுகளில் அதிசயக்க வைக்கும் ஒரு அங்கம்.

11 இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள் கொல்லப்பட்ட பிளாக் செப்டம்பர் பின்னணியில் இருந்த அலி ஹசன் சலாமே, பல ஆண்டுகள் கண்காணிக்கப்பட்டு இறுதியாக 1979இல் லெபனானின் பெய்ரூட்டில்  மொசாட் முகவர்களால் நடத்தப்பட்ட ஒரு கார் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்.  

வரலாற்று பதிவுகளில் மறக்கமுடியாத தாக்குதலாக இது இடம்பெற, இதற்கு தலைமை தாங்க ஒரு பெண் உளவாளியை மொசாட் நியமித்தமையே காரணமாகும்.

மியூனிக் படுகொலைகளுக்கு பதிலடியாக, அப்போதைய இஸ்ரேல் பிரதமர் கோல்டா மேயர் (Golda Meir) உத்தரவின் பேரில் மொசாட், பிளாக் செப்டம்பர் உறுப்பினர்களை குறிவைத்து “ஆபரேஷன் ரத்து” என்ற இரகசிய நடவடிக்கையைத் தொடங்கி இறுதியில் வெற்றிகண்டது.

ஒரு பிரித்தானிய தொண்டு ஊழியராக மறைமுகமாக செயல்பட்ட அந்த பெண்,  பெக்கா தெருவில் (Beka Street) அமைந்த அனிஸ் அசாஃப் கட்டடத்தில் ஒரு குடியிருப்பை வாடகைக்கு எடுத்து, சலாமேவின் வாகனத் தொடர் ரூ வெர்டன் (Rue Verdun) தெருவில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு சிவப்பு வோக்ஸ்வாகன் காரைக் கடந்தபோது, 100 கிலோ வெடிபொருட்கள் வெடிக்கச் செய்யப்பட்ட நிகழ்வே மொசாட் என்ற பெயரை இன்றைய உலகிம் ஒரு நொடியேனும் சிந்திக்க வைக்கிறது.

இப்படி ஒரு தாக்குதலை நடத்த மொசாட் தெரிவுசெய்த அந்த பெண் யார்? மொசாட் இதற்கு அவரை நியமிக்க காரணம் என்ன இந்த விடயங்களை விரிவாக ஆராய்கிறது ஐ.பி.சி தமிழின் தொடரும் காணொளி பதிவு…

https://www.youtube.com/embed/oqU5AChQLec

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.