முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மலையக மக்களுக்காக குரல் கொடுத்த சிறீதரன் எம்பி: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற ஆட்சியாளர்கள் மலையக மக்களின் காணி உரிமை அற்றவர்கலாக தொடர்ந்தும் வைக்கப்பார்கிறார்கள் என யாழ்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை கொட்டகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “மலையக மக்களின் வரலாறு 200வருடங்களை கடந்துள்ளது.

எதிர்கால நம்பிக்கையின்மை

அவர்கள் கணடாவிலோ அல்லது பிரித்தானியாவிலோ வாழ்ந்தாலும் அவர்களுக்கு மூன்று அல்லது ஜந்து வருடங்களில் குடியுரிமை கிடைக்கப்பெறுகிறது.

ஆனால் இங்கு பத்து பரம்பரைகளை கடந்து வந்த மக்களுக்கு ஒரு துண்டு காணி கூட வழங்கப்படவில்லை.

மலையக மக்களுக்காக குரல் கொடுத்த சிறீதரன் எம்பி: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Sridharan Mp Spoke Up For People Of The Upcountry

அவர்கள் வாழுகின்ற பிரதேசத்தில் ஒரு வீட்டை கட்டி கொள்வதற்கோ அல்லது கழிப்பறை ஒன்றை கட்டி கொள்வதற்கோ தங்களுக்குரிய ஆடுமாடுகளை வளர்த்து கொள்வதற்கான இடங்களை அமைத்து கொள்வதற்கு கூட தோட்ட நிர்வாகத்தின் அனுமதியினை பெறவேண்டும்.

குறிப்பாக வடக்கு கிழக்கைவிட காணி பிரச்சினை, வாழ்வியல் பிரச்சினை அவர்களுக்கான எதிர்கால நம்பிக்கையின்மை என்பது மலையகத்தில் தான் அதிகமாக காணப்படுகிறது.

வடக்கு கிழக்கில் உள்ள காணி பிரச்சினை என்பது பாரம்பரியமாக பூர்வீகமாக இருந்த காணிகளை இராணுவம் பிடித்து வைத்திருக்கிறது.

பெருந்தோட்ட தொழிலாளர்

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்றத்தில் நாங்கள் பேசியிருக்கிறோம்.

மலையக மக்களுக்காக குரல் கொடுத்த சிறீதரன் எம்பி: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Sridharan Mp Spoke Up For People Of The Upcountry

700ரூபாய் சம்பளமாக இருந்த காலப்பகுயிலும் நாங்கள் பேசியிருந்தோம் ஆனால் 1700 ரூபாய் சம்பளம் என்பது ஒரு கண்துடைப்பு செயலாக காணப்படுகிறது.

ஒரு குடும்பம் வாழ்வதற்கு ஒரு நாளைக்கு தற்போது உள்ள நிலைமையில் 5000 ரூபாய் தேவைப்படுகிறது அவர்களுடைய ஒருநாள் ஊதியம் 1350 ரூபாய் என அறிவிக்கப்பட்டாலும் அது கூட சரியாக வழங்குவதில்லை.

பொருளாதார கொள்கை

சம்பளம் என்பதற்கு அப்பால் அவர்களுடைய பொருளாதார இயலுமை என்பது முறையாக கொண்டு வரப்பட வேண்டும்.

மலையக மக்களுக்காக குரல் கொடுத்த சிறீதரன் எம்பி: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Sridharan Mp Spoke Up For People Of The Upcountry

கடந்த காலங்களில் இருந்த அரசுகள் பாரிய பேரழிவை இந்த மண்ணில் ஏற்படுத்தி ஊழல் நிறைந்தவர்களாக காணப்பட்டதாக தற்போதைய வரலாறு கூறுகிறது.

இந்நிலையில், இலங்கையினுடைய பொருளாதார வீழ்ச்சி என்பது ஒட்டுமொத்த மக்களுக்கானது.

இருக்கின்ற அரசு வாழுகின்ற மக்களின் உரிமைகளை அவர்களுடைய பொருளாதார கொள்கைகளை சரியான முறையில் புரிந்து கொண்டு அரசியல் தீர்வினை கொண்டு செல்ல வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.