முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஏமனில் கேரள செவிலியருக்கு மரண தண்டனை

கேரளாவைச் சேர்ந்த செவிலியர் ஒருவருக்கு ஏமன் நாட்டில் 16 ஆம் திகதி மரண தண்டனை நிறைவேற்றப்பட இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நிமிஷா பிரியா (34) எனபவருக்கு 2008 ஆம் ஆண்டு, ஏமன் நாட்டில் செவியர் வேலை கிடைத்தது.

இந்தநிலையில் அங்கு தன்னை துன்புறுத்தி, தனது கடவுச்சீட்டை பிடுங்கி வைத்துக்கொண்ட ஏமன் நாட்டவரான மஹ்தி (Talal Abdo Madhi) என்பவரிடமிருந்து எப்படியாவது தனது கடவுச்சீட்டை மீட்டு, தப்பி வந்துவிட வேண்டும் என திட்டமிட்ட நிமிஷா அவருக்கு மயக்க ஊசி போட்டிருக்கிறார்.

மரண தண்டனை

இருப்பினும், மயக்க மருந்தின் அளவு அதிகமாக மஹ்தி உயிரிழந்துள்ள நிலையில் மஹ்தியை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட நிமிஷாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நிமிஷாவின் தண்டனையைக் குறைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் எதுவும் இதுவரை பலனளிக்காத நிலையில், நாளை மறுநாள் அதாவது ஜூலை மாதம் 16 ஆம் திகதி, நிமிஷாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.

ஏமனில் கேரள செவிலியருக்கு மரண தண்டனை | Kerala Nurse Awaiting Death Penalty In Yemen

இந்தநிலையில், நிமிஷா விவகாரத்தில் இந்திய அரசு தலையிட வலியுறுத்துமாறு இந்திய உச்சநீதிமன்றத்தைக் கோரி புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், நிமிஷா விடயத்தில் இந்திய அரசால் பெரிய அளவில் எதுவும் செய்ய முடியாது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில நடவடிக்கை

இந்தியாவின் அட்டனி ஜெனரலான AG வெங்கடரமணி, ஏமனுடையை நிலைமையைப் பொருத்தவரை இது ஒரு சென்சிடிவான விடயம் ஆகவே, இந்திய அரசால் நிமிஷா விடயத்தில்பெரிய அளவில் எதுவும் செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.

அந்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் தூதரக ரீதியான உறவு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏமனில் கேரள செவிலியருக்கு மரண தண்டனை | Kerala Nurse Awaiting Death Penalty In Yemen

ஒரு அளவுவரைதான் இந்திய அரசால் சில நடவடிக்கைகளை எடுக்கமுடியும் எனவும் நாங்கள் அந்த எல்லையை அடைந்துவிட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவான முறையில் எதையாவது செய்து நிலைமையை சிக்கலாக்க விரும்பவில்லை ஆகவே, தனிப்பட்ட முறையில்தான் ஏதாவது செய்யவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.  

பொதுவான முறை

ஏமன் நாட்டில் இஸ்லாமிய சட்டமான ஷரியா சட்டம் பின்பற்றப்படுவதால், அச்சட்டப்படி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு இரத்தப்பணம் என்னும் ஒரு தொகையை செலுத்தினால், அவர்கள் குற்றவாளியை மன்னிப்பதாக அறிவிப்பார்கள்.

இருப்பினும், அது தூதரக முறையிலான அணுகல் அல்ல ஆகவே, அது விடயமாக ஏமன் நாட்டில் செல்வாக்கு மிக்க ஒருவரான ஒரு ஷேக்கின் உதவி நாடப்பட்டுள்ளது.

ஏமனில் கேரள செவிலியருக்கு மரண தண்டனை | Kerala Nurse Awaiting Death Penalty In Yemen

அதுவும் எந்த பலனும் அளிக்கவில்லை எனவும் அட்டனி ஜெனரலான AG வெங்கடரமணி தெளிவுப்படுத்தியுள்ளார்.

எனவே, நிமிஷாவின் தண்டனை நிறைவேற்றப்பட்ட இன்னமும் ஒரு நாள் மட்டுமே உள்ளதால், என்ன நடக்கப்போகிறது என்பது தெரியாததால் அச்சம் மட்டுமே நீடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.