ஓவ்வொரு வாரத்தின் வெள்ளிக்கிழமை எப்படி திரையரங்கில் படம் வெளியாகிறதோ, அது போன்று ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் OTT-ல் புதிய படங்களை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டு இருப்பார்கள்.
அந்த வகையில், இந்த வாரம் என்னென்ன படங்கள் எந்தெந்த OTT தளத்தில் வெளியாக உள்ளது என்பது குறித்து கீழே காணலாம்.
படைத் தலைவன்:
விஜயகாந்தின் இளைய மகன் ஷண்முகப் பாண்டியன் ஹீரோவாக நடித்து திரைக்கு வந்த படம் படைத் தலைவன். இப்படம் ஜூலை 18ந் தேதி அதாவது நாளை டெண்ட்கொட்டா OTT தளத்தில் வெளியாக உள்ளது.


3BHK, பறந்து போ படங்களின் 13 நாட்கள் வசூல்.. இத்தனை கோடியா?
குபேரா:
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவான குபேரா படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகர்ஜுனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும் தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தெலுங்கு சினிமா மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் நாளை அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியாக உள்ளது.

டிஎன்ஏ:
இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த படம் DNA. அதர்வா – நிமிஷா சஜயன் இணைந்து நடித்திருந்த இப்படம் கடந்த ஜூன் 20ம் தேதி திரைக்கு வந்தது.
இந்நிலையில், இப்படம் வரும் ஜூலை19 – ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியாக உள்ளது.


