சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக அமரன் திரைப்படம் வெளியானது. படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.
சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படத்தில் இமானின் இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக, ஊதா கலரு ரிப்பன் பாடல்.


6 தலைமுறைகளுக்கு இருக்கும் சொத்து.. யார் இந்த பிரபல சீரியல் நடிகை?
ஷாக்கிங் தகவல்
இந்நிலையில், இந்தப் பாடல் உருவான விதம் குறித்து பாடலாசிரியர் யுகபாரதி நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து கொண்டார்.
அதில், ” வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஊதா கலரு ரிப்பன்’ பாடலை அந்தப் படத்திற்காக எழுதவில்லை. தேசிங்கு ராஜா திரைப்படத்திற்காக, நானும், இசையமைப்பாளர் இமானும் இப்பாடலை உருவாக்கினோம்.

‘ஊதா கலரு ரிப்பன்’ பாடலைக் கேட்டதும், நமது படத்திற்கு இப்படி ஒரு கேவலமான பாடல் தேவையா என்று இயக்குநர் எழில் கேட்டார். அப்போது நானும் இமானும் வருத்தப்பட்டோம்.
பின் தான் அந்த பாடலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் இடம் பெற்றது. அது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் ஹிட் ஆனது” என்று தெரிவித்துள்ளார்.

