முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பு! போதைப்பொருட்களுடன் பலர் கைது

நாடளாவிய ரீதியில் பொலிஸார் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின்
மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்
என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கைது நடவடிக்கைககள் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளன.

பொலிஸார் சோதனை

பேலியகொடை பொலிஸ் பிரிவின் நுகேபார பகுதியில் 112 கிராம் ஹெரோயின்
போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் எனத்
தெரியவந்துள்ளது.

பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பு! போதைப்பொருட்களுடன் பலர் கைது | Six People Were Caught With Drugs

மட்டக்குளி பொலிஸ் பிரிவின் கெமுனுபுர பகுதியில் உள்ள சந்தேகநபரின் வீட்டில்
பொலிஸார் சோதனை மேற்கொண்டபோது 355 கிராம் ஐஸ் போதைப்பொருள், ஒரு கிலோ 465
கிராம் ஹஷிஷ் போதைப்பொருள் மற்றும் 2 கிலோ 30 கிராம் கஞ்சா என்பன
கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது நடவடிக்கைககள்   

அத்தோடு, கொத்தட்டுவ பொலிஸ் பிரிவின் கடுகஹவத்த பகுதியில் 10 கிராம் 370
மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொத்தட்டுவ பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர்
எனத் தெரியவந்துள்ளது.

பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பு! போதைப்பொருட்களுடன் பலர் கைது | Six People Were Caught With Drugs

இதேவேளை, கடவத்தை பொலிஸ் பிரிவின் கல்வலபார பகுதியில் 7 கிராம் 100
மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கடவத்தை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவராவார்.

அத்துடன், கல்கிஸை பொலிஸ் பிரிவின் மல்லிகாராம வீதிப் பகுதியில் 10 கிராம்
700 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்