முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

செம்மணி மனித பேரவலத்திற்கு நீதி கோரி அவுஸ்திரேலியாவில் எதிரொலித்த குரல்கள்

செம்மணி மற்றும் ஏனைய மனித புதைகுழிகள் குறித்து சர்வதேச விசாரணை அவசியம் என வலியுருத்தி அவுஸ்திரேலியாவில்  (Australia) பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பேரணி, அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை தமிழர்களால் நேறறைய தினம் (21.07.2025) நடைபெற்றுள்ளது.

இதன்போது, செம்மணி மற்றும் ஏனைய மனித புதைகுழிகள் குறித்து முழுமையான சர்வதேச விசாரணை அவசியம் என இலங்கை தமிழர்கள் ஐநா மற்றும் வெளிநாடுகளின் தூதரகங்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர். 

செம்மணிமனித புதைகுழி

இலங்கை அரசாங்கத்தினால் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளமை செம்மணிமனித புதைகுழிகள் மூலம் மீண்டும் தெரியவந்துள்ளதை தொடர்ந்து நேற்று குறித்த பேரணி முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி மனித பேரவலத்திற்கு நீதி கோரி அவுஸ்திரேலியாவில் எதிரொலித்த குரல்கள் | International Awareness Rally In Australia

இந்த மனித புதைகுழிகள் தனியானதொரு சம்பவம் இல்லை,அமைதியான விதத்திலும் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்பட்ட நிலையிலும் தொடரும் இனப்படுகொலையின் ஒரு பகுதியே இந்த மனித புதைகுழிகள் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

ஐநா அலுவலகத்திடமும் உலக நாடுகளின் தூதரங்களிடமும் தமிழர்கள் சர்வதேச சமூகத்தின் உறுதியான நடவடிக்கை மற்றும் நீதியை கோரும் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

இப்பேரணியில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் பின்வருமாறு,

01. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி உட்பட்ட பல மனித புதைகுழிகள் பற்றிய முழுமையானச் சர்வதேச நீதி விசாரணை நடைபெறவேண்டும். 

02
. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐநா மனிதவுரிமைகள் பேரவையில் சிறிலங்கா மீது வலுவான தீர்மானத்தைக் கொண்டுவர அவுஸ்திரேலியா உட்பட அனைத்து நாடுகளும் தெளிவான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும்.

03.
தமிழர்கள் மீது இனப்படுகொலைகள் புரிந்த படை அதிகாரிகள் மீதான பயணத்தடையை அமெரிக்கா, பிரித்தானியா, கனடா போல அனைத்து நாடுகளும் நடைமுறைப்படுத்தவேண்டும்.

செம்மணி மனித பேரவலத்திற்கு நீதி கோரி அவுஸ்திரேலியாவில் எதிரொலித்த குரல்கள் | International Awareness Rally In Australia

04.
தமிழர் இனவழிப்பில் பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சியங்களையும் பாதுகாக்கும் வகையில் ஏதிலிகளுக்கான பாதுகாப்பை அனைத்து நாடுகளும் பொறுப்புணர்வுடன் வழங்கவேண்டும்.

05.
சிறிலங்கா அரசு கையகப்படுத்தியுள்ள தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்களை விடுவிப்பதுடன் தமிழர் தாயகத்தைப் பல்வேறு வகையில் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்த சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

06.
பயங்கரவாதத் தடைச் சட்டம் என்ற பெயரில் இன்றும் தொடர்ந்து வரும் தமிழன அடக்குமுறைகளை நிறுத்துவதற்கும் நீண்டகாலமாகச் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்வதற்கும் சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்கவேண்டும்.

07.
தமிழர்கள் மீது கடந்த 76 ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் இனவழிப்புச் செயற்பாட்டை நிறுத்தி ஓர் சர்வதேச நீதிப்பொறிமுறை ஊடாகத் தமிழர்களின் வாழ்வுரிமையை உறுதிசெய்ய அனைத்து நாடுகளும் ஆதரவளிக்க வேண்டும்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.