யோகி பாபு
நடிகர் யோகி பாபு கோலிவுட்டில் முக்கிய காமெடியன்களில் ஒருவர். நயன்தாரா ஜோடியாக கோலமாவு கோகிலா என்ற படத்தில் நடித்த முதல் காமெடி நடிகராக வலம் வருகிறார்.
இவர் தற்போது அஜித், விஜய், ரஜினி என பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி, கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் கைவசம் தற்போது Medical Miracle, ராஜா சாப், ஜெயிலர் 2 உள்ளிட்ட பல படங்கள் உள்ளன. யோகி பாபு இன்று தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.


ஒரு படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் செய்த விஷயம்.. மேடையில் தயாரிப்பாளர் நெகிழ்ச்சி
இத்தனை கோடியா?
இந்நிலையில், அவருடைய சொத்து மதிப்பு குறித்து தகவல் தற்போது இணையத்தில் உலா வந்த வண்ணம் உள்ளது.
அந்த வகையில், ஒரு நாளைக்கு ரூ.15 லட்சம் வரை சம்பளமாக அவர் வாங்குகிறார் என்றும், அவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 75 கோடி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


