உலகளாவிய ரீதியாக முழுமையாக இலவச கல்வியை வழங்கும் நாடுகளில் ஒன்றாக இலங்கை உள்ளது. அதற்காக வருடாந்தம் வரவு செலவுத்திட்டத்தில் பெருந்தொகை நிதி ஒதுக்கிடு செய்யப்படுகிறது.
எனினும் சமகாலத்தில் கல்வி என்பது வியாபார பொருளாக மாறியுள்ள நிலையில், கல்வி மாபியாங்கள் அதிகளில் உருவெடுத்துள்ளனர்.
ஆடிப்பாடும் சிறு வயது முதல் கடுமையான பாடப்படிப்பு, பிரத்தியேக வகுப்புகள் என பிள்ளைகளை கொடுமைப்படுத்தும் நிர்ப்பந்தத்திற்கு பெற்றோர் தள்ளப்பட்டுள்ளனர்.
பாடசாலை கல்விக்கு அப்பால் தனியார் வகுப்புகளின் பெருக்கமும், அவர்கள் உருவாக்கும் அத்தியாவசிய தேவையுமே இதற்கு பிரதான காரணமாகும்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இப்படிக்கு அரசியல் நிகழ்ச்சி….

