தண்டனை பெற்றவர்களை இரண்டு நாடுகளுக்கும் இடையில் பரிமாற்றிக் கொள்வது தொடர்பான
இருதரப்பு ஒப்பந்தத்தில் இலங்கையும், போலந்தும் கையெழுத்திட்டுள்ளன.
இந்த ஒப்பந்தம் இந்த வாரம் கொழும்பில் சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க, மற்றும்
போலந்தின் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மனித உரிமைகள் துறையின் துணை
பணிப்பாளர், பிரெஸ்மிஸ்லாவ் டோமாகலா ஆகியோருக்கு இடையே கையெழுத்தானது.
தண்டனை பெற்றவர்களை, இரண்டு நாடுகளுக்கு இடையில் பரிமாற்றிக் நிர்வகிக்க
தேவையான சட்ட கட்டமைப்பை நிறுவுவதற்கும் வலுப்படுத்துவதற்கும் உதவுவதை இந்த
ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இருதரப்பு ஒப்பந்தம்
இதேவேளை ஐக்கிய இராச்சியம், இந்தியா, குவைத், மாலைத்தீவுகள், பாகிஸ்தான்,
ரஸ்யா, யுக்ரைன், உக்ரைன், ஈரான், தாய்லாந்து, செக் குடியரசு மற்றும்
லாட்வியா உள்ளிட்ட பல நாடுகளுடன் இலங்கை கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தங்களை
செய்துள்ளது.

இந்த ஆண்டு நவம்பர் 11 அன்று லாட்வியாவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம்
முடிவுக்கு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

