தற்போதைய வெப்பமான காலப்பகுதியில் முகம் பொலிவிழந்து கருமையடைந்து காணப்படும்.
இதற்காக அதிக பணத்தை செலவு செய்து அழகு நிலையங்களில் நேரத்தை பெண்கள் மற்றும் ஆண்கள் செலவு செய்கின்றனர்.
இந்த வீட்டில் பயன்படுத்தும் பொருட்களே போதும், உங்கள் முகம் பளிங்கு போல் மாறிவிடும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
பால்
- பாலில் உள்ள லாக்டிக் அமிலம் இறந்த செல்களை அகற்றி புதிய செல்களை உருவாக்க உதவுகிறது.
- ஒரு டீஸ்பூன் பால் கிரீமில் ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் சில துளிகள் ரோஸ் வாட்டர் சேர்க்கவும்.
- இதை முகம், முழங்கால் போன்ற வறண்ட பகுதிகளில் குளிப்பதற்கு முன் தடவவும். இது சருமத்தை பிரகாசமாகவும், ஆழமான ஈரப்பதத்துடனும் வைத்திருக்கிறது.

- ஒரு சுத்தமான பாத்திரத்தில் பசும்பாலை எடுத்து கொள்ளவும். முகத்தை கழுவிய பின், ஒரு காட்டன் பஞ்சை எடுத்து பாலில் தோய்த்து சிறிய அழுத்தம் கொடுத்து பூசிக் கொள்ளவும்.
- இக்கலவையை நன்றாக காய வையத்த பின்பு சுடுதண்ணரீல் முகத்தை கழுவுங்கள்
தேன்
- ஒரு இயற்கை ஹ்யூமேக்டன்ட் (moisture-locking agent). நேரடியாக முகத்தில் தேனை தடவி 15 நிமிடங்கள் விட்டு கழுவவும்.
- விரும்பினால் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்துப் பயன்படுத்தலாம்.
- இது சருமத்தை பளபளப்பாகவும், இளமையாகவும் மாற்றுகிறது. தேனின் ஆக்ஸிஜனேற்ற மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் தோல் அழற்சிகளைத் தடுக்கும்.
கற்றாழை ஜெல்
- கற்றாழை ஜெல்லில் உள்ள நீர்ச்சத்து சருமத்தை ஆழமாக ஈரப்பதப்படுத்துகிறது.

- வீட்டில் உள்ள கற்றாழை இலைகளிலிருந்து ஜெல்லை எடுத்து, முகத்தில் மற்றும் கைகளில் தடவவும்.
- 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். இது தோல் எரிச்சல், அரிப்பு, செதில் போன்ற பிரச்சினைகளை நிவர்த்தி செய்து சருமத்தை மிருதுவாக்குகிறது.

