மாரீசன்
மாமன்னன் படத்தை தொடர்ந்து வடிவேலு மற்றும் பகத் பாசில் இருவரும் மீண்டும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாரீசன். இயக்குநர் சுதீஷ் ஷங்கர் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் கோவை சரளா, விவேக் பிரசன்னா, பி. எல். தேனப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதே சமயம் படத்தின் மீது கலவையான விமர்சனங்களும் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குக் வித் கோமாளி மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.. பொண்ணு யார் தெரியுமா
பாக்ஸ் ஆபிஸ்
திரையரங்கில் வெளிவரும் ஒவ்வொரு திரைப்படங்களின் வசூல் குறித்து நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில், இந்த வாரம் வெளியாகியுள்ள மாரீசன் படத்தின் 2 நாட்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, மாரீசன் திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் பாக்ஸ் ஆபிசில் ரூ. 4 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் மாரீசன் படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.