பாலஸ்தீன (Palesine) அரசை வரும் செப்டம்பர் மாதம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க கனடா திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மார்க் கார்னி நேற்றையதினம் (30) அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பின் மூலம் அண்மைய நாட்களில் இந்த திட்டத்தை அறிவிக்கும் மூன்றாவது G7 நாடாக கனடா திகழ்கிறது.
இந்த அங்கீகாரம், பாலஸ்தீன அதிகாரத்திற்குள் ஜனநாயக சீர்திருத்தங்கள் மேற்கொள்வதைப் பொறுத்தது என்று கார்னி தெளிவுபடுத்தினார்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை
ஹமாஸ் இல்லாமல் அடுத்தவருடம் பாலஸ்தீன அதிகாரசபைக்கு தேர்தலை நடத்த வேண்டும் என பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தில் கனடா உத்தியோகபூர்வமாக பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் யூதகுடியேற்றங்கள் விஸ்தரிப்பு, காசாவில் மோசமடைந்துவரும் நிலைமை ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளதாக கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.
காசாவில் காணப்படும் மனித துயரம் சகிக்க முடியாததாக காணப்படுகின்றது மிக வேகமாக மோசமடைகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும்
இதேவேளை காசா பகுதியில் மோதலை இஸ்ரேல் முடிவுக்குக் கொண்டுவரவில்லை என்றால், பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பேன் என்று பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்(Keir Starmer) எச்சரித்துள்ளார்.

காசா பகுதிக்கு உதவி விநியோகங்களை மீண்டும் தொடங்க ஐக்கிய நாடுகள் சபையை அனுமதிக்குமாறு பிரிட்டிஷ் பிரதமர் இஸ்ரேலைக் கேட்டுக் கொண்டார். இது செய்யப்படாவிட்டால், செப்டம்பரில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பாலஸ்தீனத்தை இஸ்ரேல் ஒரு நாடாக அங்கீகரிக்கும் என்றும் பிரிட்டிஷ் பிரதமர் கூறினார்.
இதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு பிரான்ஸ் இதே போன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும், உலகளவில், பாலஸ்தீன அரசின் முறையான அங்கீகாரம் பரவலாக உள்ளது. ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளில் கிட்டத்தட்ட 150 நாடுகள் ஏற்கனவே பாலஸ்தீன அரசை அங்கீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

