ரஜினிகாந்த்
தமிழ் சினிமா இல்லை இந்திய சினிமாவே கொண்டாடும் சூப்பர் ஸ்டார் என்றால் அது நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி தான்.
மாஸா, கெத்தா கூலி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு வந்தவர் எப்போது பேசுவார் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்க அரங்கம் அதிர மேடைக்கு வந்த ரஜினிகாந்த்.
ஹைலைட்ஸ்
கூலி படத்தின் ரியல் ஹீரோ லோகேஷ் கனகராஜ் தான். அவர் 2 மணி நேரம் ஒரு ஸ்பீச் கொடுத்தார், நான் உட்கார்ந்து பார்த்தேன் முடியல, படுத்து பார்த்தேன் முடியல, தூங்கி எழுந்து பார்த்தேன் அப்பவும் முடியல.
அனிருத் இந்தியாவின் முதல் Rockstar
சத்யராஜ்
அவருக்கும் எனக்கும் கருத்து ரீதியாக முரண்பாடு இருக்கலாம், ஆனா மனதில் பட்டதை சொல்லிட்டு போய்டுவாரு. மனசுல பட்டத சொல்றவங்கள நம்பலாம் ஆனால் உள்ளே வெச்சிட்டு இருக்கிறவங்கள நம்ப முடியாது.
நாகர்ஜுனா, என்ன கலர், என்ன Skin, நான் அப்படியே பார்க்கிறேன். எனக்கு முடி எல்லாம் கொட்டி போச்சு, என்ன சீக்ரெட் கேட்டேன். அவர் ஒன்றும் இல்லை, உடற்பயிற்சி என்றார்.
நான் பஸ் கன்டக்டரா பணிபுரிந்த போது எனது நண்பன் அவன் செயின் கொடுத்து என்னை சினிமாவில் நடிக்க சொன்னான், அவனால் தான் இன்னைக்கு நான் இங்கே இருக்கேன்.
எவ்ளோ காசு பணம் இருந்தாலும் நிம்மதி இல்லைனா அது வேஸ்ட்.

