மாளவிகா மோகனன்
மலையாளத்தில் வெளிவந்த பட்டம் போலே படத்தின் மூலம் நடிகையாக சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இதன்பின் கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வந்த மாளவிகா, ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர் படத்தில்தான் கதாநாயகியானார். கோலிவுட், மோலிவுட் மற்றும் பாலிவுட் என கலக்கிக்கொண்டிருந்த மாளவிகா மோகனன், தனக்கு கிளாமராக மட்டுமல்ல ஆக்ஷன் மற்றும் மிரட்டலான கதாபாத்திரத்திலும் நடிக்க வரும் என காட்டிய படம்தான் தங்கலான்.
மேலும் தற்போது பிரபாஸ் உடன் இணைந்து ராஜா சாப், மோகன் லால் உடன் இணைந்து ஹிருதயபூர்வம் மற்றும் கார்த்தியுடன் இணைந்து சர்தார் 2 என மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.

ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக இருக்கும் மாளவிகா மோகனனின் 32வது பிறந்தநாள் இன்று. ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகிறார்கள்.

கூலி படத்தில் வில்லனாக நடிக்க நாகர்ஜுனா வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
சொத்து மதிப்பு
இந்நிலையில், மாளவிகா மோகனன் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 16 கோடி முதல் ரூ. 20 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.

மேலும், ரூ. 4 கோடி முதல் ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. Mercedes ML 350 – ரூ. 50 லட்சம், BMW – ரூ. 2.60 கோடி மற்றும் Audi Q7 ரூ. 81 லட்சம் ஆகிய சொகுசு கார்களை சொந்தமாக வைத்துள்ளாராம்.

