வடக்கு கிழக்கை தமிழர்கள் ஆட்சி செய்தார்கள் என்ற வரலாற்றை இல்லாமல் செய்வதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பாடப்புத்தகத்தில் இருந்து ஈழம் என்ற சொல்லை நீக்கியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
நேற்றைய (05.08.2025) தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்,“வடக்கு மாகாண முதலமைச்சராக சுமந்திரன வருவாராக இருந்தால் அன்று தான் நான் அரசியலில் இருக்கும் கடைசி நாளாக இருக்கும்.
நாடாளுமன்றத்தில் இருந்த போது நேரலையில் தமிழ் ஈழம் என்ற சொல்லை பயன்படுத்தியிருந்தேன் அதற்காக தான் சிஐடிக்கு அழைக்கப்பட்டேன் எனவும் அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்த விடயங்களை கீழ் உள்ள காணொளியில் காண்க….
https://www.youtube.com/embed/8E45qF-akkg