எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்யும் தலைவர்கள் இன்றைய தினம் விசேட கூட்டெமான்றை நடத்த உள்ளனர்.
நாடாளுமன்றில் இந்த விசேட கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது தொடர்பில் இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட உள்ளது.
நம்பிக்கையில்லா தீர்மானம்
மேலும் அரசாங்கம் வாக்குறுதி அளித்ததற்கு இணங்க புதிய அரசியல் அமைப்பினை உருவாக்குவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட உள்ளது.
குறிப்பாக புதிய அரசியல் அமைப்பு தொடாபில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் யோசனை ஒன்று முன்வைக்கப்பட உள்ளது.
ஐக்கிய மக்கள்சக்தி, ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் இந்த சந்திப்பில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டாலும் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் காணப்படுவதனால் அது அரசாங்கத்தினை பாதிக்காது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.