முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பள்ளிவாசலில் மாணவர்களுக்கு அடிப்படைவாதம் கற்பிப்பு.. ஞானசார தேரரின் சர்ச்சைக்குரிய கருத்து

மாவனல்லை மஸ்ஜித் அல் உதா பள்ளிவாசலில் இஸ்லாமிய மாணவர்களின் மூளைச் சலவை செய்யப்படுவதோடு அடிப்படைவாதம் ஊட்டப்படுவதாக ஞானசார தேரர் நேற்று(08) நடத்திய ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அந்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

“மாவனல்லை மஸ்ஜித் அல் உதா பள்ளிவாசலில் நேற்று(08) நடைபெற்ற இஜ்திமா நிகழ்வில் மாணவர்களுக்கு அடிப்படைவாதம் போதிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

அடிப்படைவாதங்கள் 

தான் முஸ்லிம் மக்கள் தொடர்பில் கதைப்பதை நிறுத்தியுள்ளேன். ஆனாலும் நாட்டின் நன்மை கருதியே இதைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட அவர்,

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமிய அமைப்பின் ஏற்பாட்டில் இந்த இஜ்திமா நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிவாசலில் மாணவர்களுக்கு அடிப்படைவாதம் கற்பிப்பு.. ஞானசார தேரரின் சர்ச்சைக்குரிய கருத்து | Galagoda Aththe Gnanasara Srilankan Muslims

இவ்வாறான அடிப்படைவாதங்கள் இன்று இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.

நாம் 2014ஆம் ஆண்டு முதல் இஸ்லாமிய அடிப்படைவாதம் தலைதூக்குவதாகக் குறிப்பிட்டோம். அச்சந்தர்ப்பத்தில் எம்மை பிரிவினைவாதிகள் மதவாதிகள் என்றவாறு தூற்றினர். ஆனால் என்ன நடந்தது என்று அனைவரும் அறிவர்.

நாம் இவ்வாறான கருத்துக்களை ஆய்வு செய்து ஆதாரங்களுடனே தெரிவித்தோம். அரசிடமோ அல்லது வேறு அமைப்பிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்த விடயங்களாகும்.

ஈஸ்டர் தாக்குதல்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமிய அமைப்பு தடைசெய்யப்பட வேண்டும் என பரிந்துரைத்துள்ள நிலையில் எவ்வாறு இஜ்திமா ஒன்றை நடத்த முடியும்.

பள்ளிவாசலில் மாணவர்களுக்கு அடிப்படைவாதம் கற்பிப்பு.. ஞானசார தேரரின் சர்ச்சைக்குரிய கருத்து | Galagoda Aththe Gnanasara Srilankan Muslims

ஜமாஅத்தே இஸ்லாமிய அமைப்பின் தலைவர் அஜ்ஜுல் அக்பரின், சகோதரரான நதீர் மௌலவி சிலர் சிறையில் உள்ளார்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாட்டு மக்கள் அவதானமாக இருப்பதற்காகவே நாம் சில தரவுகளை வெளிப்படுத்தினோம். ஆனால் அரசியல் வாதிகளின் பொய்யான கூற்றுக்களால் நாம் தெரிவிக்கும் கருத்துக்கள் மழுங்கடிக்கப்பட்டன” என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.