முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நெதன்யாகுவுக்கு எதிராக இஸ்ரேலில் வெடித்த மக்கள் போராட்டம்

இஸ்ரேலில் (Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு (Benjamin Netanyahu) எதிராக மக்கள் வீதிகளில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காஸாவில் (Gaza) உடனடியாக சண்டை நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காஸா முழுவதையும் படை பலத்தால் ஆக்கிரமித்து இஸ்ரேல் கட்டுப்பாட்டுக்குள் இருக்கச் செய்ய திட்டமிட்டிருப்பதாக இஸ்ரேல் முக்கிய அமைச்சர்கள அளவிலான கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிணைக் கைதி

இத்திட்டத்துக்கு அந்நாட்டின் அமைச்சரவையால் இன்று (10) ஒப்புதல் வழங்கப்படும் என்றும் எதிர்பர்க்கப்படுகின்றது.

இருப்பினும், இத்திட்டத்தால் பிணைக் கைதிகளாக சிறைப்பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் மக்கள் உயிருக்கு ஆபத்து நேரலாம் என்று இராணுவம் எச்சரித்துள்ளது.

நெதன்யாகுவுக்கு எதிராக இஸ்ரேலில் வெடித்த மக்கள் போராட்டம் | People Protest Against Netanyahu In Israel

இந்தநிலையில், இத்திட்டத்துக்கு பொது வெளியில் எதிர்ப்பலை கடுமையாக வீசுவதுடன் காஸாவில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு திட்டத்துக்கு ஏற்கெனவே சர்வதேச சமூகத்தால் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், உள்நாட்டிலும் அரசுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இஸ்ரேல் அரசுக்கு எதிராக மக்கள் தலைநகர் டெல் அவிவ் வீதிகளில் திரண்டு நேற்று (09) இரவு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டக்காரர்கள் 

இந்தப் பேரணி மற்றும் போராட்டத்தில் சுமார் 1,00,000 பேர் வரை பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளவர்களில், அங்கு எஞ்சியுள்ள 50 பேரையும் மீட்டுக்கொண்டுவர போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நெதன்யாகுவுக்கு எதிராக இஸ்ரேலில் வெடித்த மக்கள் போராட்டம் | People Protest Against Netanyahu In Israel

ஹமாஸால் பல பிணைக்கைதிகள் ஏற்கெனவே விடுவிக்கப்பட்டிருக்கும் நடவடிக்கையானது, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தலைமைக்கு இடையிலான தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தையால் நடைபெற்ற முன்னேற்றங்களாகும்.

இந்தநிலையில், அதே பாணியில் சண்டை நிறுத்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பிணைக் கைதிகளை மீட்க கோரிக்கை வலுத்துள்ளது.

இதற்காக, காஸாவில் உடனடியாக சண்டை நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் மாலை திருவிழா

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.