முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழர் பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரை பகுதியின் சவுக்குத் தோட்டத்திலிருந்து இளைஞர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை பிரதேச வாசிகளால் வழங்கப்பட்ட தகவலை அடுத்து அவ்விடத்துக்கு விரைந்த பொலிஸார் இன்று (11) பகல் 12.00 மணியளவில் சடலத்தை மீட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை

செங்கலடி கணேச கிராமத்தைச் சேர்ந்தவரும் ஏறாவூர் பகுதியில் தங்க ஆபரண கடையில்
ஒன்றில் வேலை செய்துவரும் லக்கி என்றழைக்கப்படும் 34 வயதுடைய புத்திரசிகாமணி
ல்க்ஷமன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதேவேளை, சடலம் மீட்கப்பட்ட இடத்தின் அருகில் இருந்து குறித்த இளைஞர் பயணித்த மோட்டார் சைக்கிள் அங்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

தமிழர் பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு! | Body Of A Young Man Recovered From Batticaloa

அதனையடுத்து மோட்டார் சைக்கிளை பொலிஸார் கைப்பற்றினர்.

உயிரிழந்த நபர் ஏறாவூர் பகுதியிலுள்ள உறவினரது தங்க ஆபரண விற்பனை நிலையம்
ஒன்றில் வேலை செய்துவருவதாகவும் சம்பவதினமான நேற்று மாலை வீட்டை விட்டு
வெளியேறிய நிலையில் இரவாகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள்
தேடிவந்துள்ளனர்.

குறித்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்க
நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞரின் மரணம் கொலையா? தற்கொலையா என்பது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலதிக தகவல் – பவன் 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்